மகளிர் ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் : இந்திய அணி அறிவிப்பு..!

13-வது மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் செப்டம்பர் 30 முதல் நவம்பர் 2 வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது.  

 

இத்தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு ஹர்மன்பிரீத் கவுர் கேப்டனாகவும், ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்திய அணியின் முழு விவரம்:

 

ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், தீப்தி ஷர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரேணுகா சிங் தாக்கூர், அருந்ததி ரெட்டி, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), கிராந்தி கவுட், அமஞ்சோத் கவுர், ராதா யாதவ், ஸ்ரீ சரணி, யஸ்திகா (விக்கெட் கீப்பர்).

 

இந்திய மகளிர் அணி இதுவரை உலகக்கோப்பையை வென்றதில்லை. 2005 மற்றும் 2017-ஆம் ஆண்டுகளில் இறுதிப்போட்டி வரை முன்னேறி, தோல்வியை தழுவியது. இந்தமுறை சொந்த மண்ணில் நடக்கும் இப்போட்டியில் கோப்பையை வென்று சாதனை படைக்குமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

 

Edited by Mahendran

 

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.