ஷாருக்கானுக்கு சொன்ன கதையில் சிவகார்த்திகேயன்!.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய எஸ்.கே!…
Sivakarthikeyan: அமரன் பட வெற்றி சிவகார்த்திகேயனின் மார்க்கெட் மதிப்பை உயர்த்தி விட்டது. அந்த படம் 300 கோடி வரை வசூல் செய்தது. எனவே தற்போது 70 கோடி சம்பளம் வாங்கும் நடிகராக சிவகார்த்திகேயன் மாறி இருக்கிறார். மேலும் பெரிய இயக்குனர்கள், நல்ல கதைகள் என தேர்ந்தெடுத்து நடிக்க துவங்கி விட்டார்.
விஜயின் இடத்தை சிவகார்த்திகேயனே பிடிப்பார் என பலரும் பேசிய நிலையில் விஜயை வைத்து துப்பாக்கி படம் எடுத்த ஏ.ஆர் முருகதாஸை அவரே தொடர்பு கொண்டு ‘நாம சேர்ந்து ஒரு படம் பண்ணலாம் சார்’ என கோரிக்கை வைத்தார். அப்படி உருவான திரைப்படம் தான் மதராஸி.
அதேபோல் சூர்யாவுக்கு சூரரைப்போற்று எனும் சிறப்பான படத்தை கொடுத்த சுதா கொங்கராவை தொடர்பு கொண்டு பராசக்தி படத்தில் ‘நான் நடிக்கிறேன் மேடம்’ என அவரே சொன்னார். ஏனெனில் சூர்யாவை வைத்து புறநானூறு என்கிற தலைப்பில் இப்படம் உருவாகவிருந்த நிலையில் அப்படத்தில் இருந்து சூர்யா விலகி இருந்தார். அதன்பின் சிவகார்த்திகேயன் உள்ளே போனார். இப்போது படம் 80 சதவீதம் முடிந்துவிட்டது.

சிவகார்த்திகேயனை வைத்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கி வரும் மதராஸி படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது மற்ற பணிகள் நடந்து வருகிறது. ஏனெனில் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி மதராஸி திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். காதல் கலந்த ஆக்சன் திரில்லர் படமாக மதராஸி உருவாகி இருக்கிறது.
இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேட்டி கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ் ‘சில வருடங்களுக்கு முன்பு ஷாருக்கானுக்கு ஒரு கதை சொன்னேன். அது அவருக்கு பிடித்திருந்தது. நான் நடிக்கிறேன் என சொல்லிவிட்டார். அப்போது முழுக்கதை தயாராகவில்லை. அதன்பின் நான் ஷருக்கானை தொடர்பு கொண்ட போது அவரிடம் இருந்து சாதகமான பதில் இல்லை. அந்த கதையைத்தான் தற்போது சிவகார்த்திகேயனுக்காக கொஞ்சம் மாற்றி மதராஸி படமாக எடுத்திருக்கிறேன்’ என சொல்லி இருக்கிறார்.
இனிமேல் முன்பு போல் காதல் கலந்த காமெடி படங்களில் நடிக்காமல் பெரிய நடிகர்களை போல கதைகளை தேர்ந்தெடுத்து பெரிய இயக்குனர்களின் படங்களில் நடிக்க வேண்டும் என ஸ்கெட்ச் போட்டு பயணித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

