Trisha: கால்ஷீட் கேட்டு போன எல்லாருக்கும் நோ! கடைசில திரிஷாவின் நிலைமை இப்படி ஆகிப் போச்சா?
Trisha: பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு ஒரு சரியான கம்பேக்கை கொடுத்த த்ரிஷா அந்த படத்தில் குந்தவை கேரக்டரில் ஒரு அழகு பதுமையாக நடித்து மீண்டும் தனது செகண்ட் இன்னிங்சை ஆரம்பித்தார். அதற்கு முன்பு வரை அவருடைய நடிப்பில் வெளியான சில படங்கள் சரியாக போகவில்லை. அதனால் வாய்ப்புகளும் அவருக்கு குறைவாகவே இருந்தன. ஆனால் பொன்னியின் செல்வன் படத்தில் அவருடைய தோற்றம் அவருடைய நடிப்பு அவருடைய கதாபாத்திரம் என அனைவருக்கும் பிடித்துப் போக அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் படங்களில் கமிட்டாகிக்கொண்டே இருந்தார்.
அந்த வகையில் விஜய் நடித்த லியோ திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். அதனைத் தொடர்ந்து அஜித் நடித்த விடாமுயற்சி படத்திலும் ஜோடியாக நடித்தார். அதன் பிறகு குட் பேட்அக்லி திரைப்படத்திலும் நடித்தார். இன்னொரு பக்கம் கமல் நடித்த தக் லைப் திரைப்படத்திலும் அவர் நடித்தார். இப்படி பெரிய பெரிய நடிகர்களின் படங்களில் அவர் கமிட்டாகி நடித்து இருந்தாலும் அவருக்கான ஸ்பேஸ் என்பது அந்த படங்களில் பெரிதாக பேசப்படவில்லை.
தற்போது சூர்யா நடிப்பில் தயாராகிக் கொண்டிருக்கும் கருப்பு திரைப்படத்திலும் நடித்து வருகிறார். ஆர்.ஜே பாலாஜி அந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் அவருக்கு அடுத்தடுத்து புதிய படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு வந்து கொண்டே இருக்கிறதாம். ஆனால் திரிஷா இப்போதைக்கு எந்த படங்களிலும் நடிக்க ஆர்வம் காட்டாமல் இருக்கிறாராம். அதற்கு காரணம் இவருடைய நடிப்பில் வெளியான முந்தைய படங்களில் தன்னுடைய கேரக்டரை நினைத்து தற்போது எந்த படங்களிலும் கமிட் ஆக வேண்டாம்.
கருப்பு திரைப்படத்தில் மட்டும் கவனம் செலுத்துவோம். அதன் பிறகு சிறிது நாட்கள் பிரேக் எடுத்துவிட்டு அதன் பிறகு எனக்கு முக்கியமான கதாபாத்திரம் இருக்கும் திரைப்படங்களில் மட்டும் நடிப்போம் என்ற முடிவை எடுத்து இருக்கிறாராம். இதற்கிடையில் பெண்களை மையப்படுத்தி வரும் படங்கள் வந்தாலுமே அதற்கும் நோ சொல்லி விடுகிறாராம் திரிஷா.
கருப்பு திரைப்படத்தை பொருத்தவரைக்கும் அது தீபாவளி ரிலீஸ் என கூறப்படுகிறது. ஆனால் சில பேர் அது பொங்கல் ரிலீஸ் ஆக கூட இருக்கலாம் என கூறி வருகிறார்கள். அப்படி பார்க்கும் பொழுது இன்னும் ஆறு ஏழு மாதங்கள் வரை அந்த படத்தின் பணிகள் நடைபெறலாம். அதுவரை த்ரிஷாவை இனி எந்த படங்களிலும் பார்க்க முடியாதா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்..
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

