தம்பிக்கு நான் இருக்கேன்.. என்ன வேணாலும் கேட்கட்டும்.. KPY பாலாவை உச்சி குளிர வைத்த விஜய பிரபாகரன்
விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு சீசன் 6 டைட்டில் வின்னர் தான் பாலா. தனது அனல் பறக்கும் பேச்சால் கவுண்டர் அட்டாக் செய்து காமெடி பன்ச்களினால் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைப்பார். இவருக்கு பன்ச் பாலா என்ற பெயரும் இருக்கிறது. அப்படி பன்ச் டயலாக் பேசி காமெடி செய்யக்கூடியவர் இவர்.
ஒரு காலகட்டத்தில் விஜய் டிவியின் எல்லா நிகழ்ச்சிகளிலும் பாலாவை பயன்படுத்த தொடங்கி விட்டனர். பாலா இல்லாத நிகழ்ச்சியே விஜய் டிவி கிடையாது என்ற நிலை இருந்தது. அந்த அளவிற்கு பாலா தனது தனித்திறமையினால் உயர்ந்திருந்தார். தொடர்ந்து தன்னுடைய பாணியில் கலக்கிக் கொண்டிருந்த பாலாவுக்கு அவர் எதிர்பார்த்தது போலவே வெள்ளித்திரியிலும் வாய்ப்பு கிடைத்தது.
சின்ன சின்ன கதாபாத்திரங்கள், காமெடி வேடங்கள் என தனக்கு கிடைக்கப்பெற்ற வாய்ப்புகளை முறையாக பயன்படுத்திக் கொண்டார். அப்படிப்பட்ட நிலையில் ஒரு கலைஞன் தனக்கு வரும் படங்களில் நடித்து அடுத்த கட்டங்களுக்கு நகர்வது மட்டுமின்றி அப்படி வரும் பணத்தை சேமித்து வைத்து வீடு, கார், நிலம் என முதலீடு செய்வது தான் பலரின் வழக்கமாக இருக்கும். ஆனால் கே பி ஒய் பாலா தனக்கு கிடைக்க கூடிய பணத்தில் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.
புயல், மழை என எதுவாக இருந்தாலும் இறங்கி ஓடி சென்று தன்னுடைய அக்கவுண்டில் இருக்கும் முழு பணத்தையும் அவர்களுக்காக செலவழிக்கும் மாமனிதன் பாலா. இப்படி தனக்கு வரக்கூடிய பணத்தை தனக்கென்று வைத்துக் கொள்ளாமல் மக்களுக்காக செலவழித்து வரும் பாலாவை பார்த்த நடிகர் ராகவா லாரன்ஸ், தற்போது இருவரும் இணைந்து மக்களுக்கு தேவையான சிறு சிறு உதவிகளை செய்து கொடுத்து வருகின்றனர்.
பாலாவின் மனதை பார்த்து அவருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்த ராகவா லாரன்ஸ், ஒரு முறை அவரிடமே கேட்டார், ’உனக்கு என்ன வேண்டும்’ என்று அதற்கு பாலா.’ அண்ணா நான் ஹீரோவாக வேண்டும்’ என்று சொல்லி இருந்தார். உடனே ராகவா லாரன்ஸ் அதற்கு சம்மதம் தெரிவித்தார். கூடிய விரைவில் ராகவா லாரன்ஸ் தயாரிப்பில் பாலா ஹீரோவாக நடிக்கும் திரைப்படம் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கு முன்னர் ”காந்தி கண்ணாடி” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக பாலா அறிமுகம் ஆகிறார். இப்படி பாலாவிற்கு ஒவ்வொருத்தராக உதவி செய்து வரும் நிலையில் தற்போது கேப்டன் விஜயகாந்தின் மகனும் தேமுதிக கட்சியின் இளைஞரணி பொதுச் செயலாளர் விஜய பிரபாகரன் தம்பி கே பி ஒய் பாலாவுக்கு நான் உதவி செய்கிறேன் என்று கூறி அரவணைப்பு காட்டியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது,
”நான் பாலா பிரதர் ஓட மிகப் பெரிய ரசிகன். ரொம்ப ஸ்ட்ரெஸ் இருக்கும்போது அவருடைய வீடியோஸ் தான் பார்ப்பேன். அதே மாதிரி இப்போ நிறைய சேவை செஞ்சுகிட்டு இருக்காரு, அதைத் தொடர்ந்து பண்ணுங்க பிரதர். உங்க சக்திக்கு மீறிய உதவி என்ன வேணும்னாலும் என்னை கேளுங்கள் பிரதர். இதை நாம் மனப்பூர்வமாக சொல்கிறேன். நிச்சயம் இந்த விஜய பிரபாகரை நீங்க கூப்பிடலாம். நான் உங்க கூட ஒரு அண்ணனாக இருந்து அரசியலை தாண்டி கேப்டன் ஆசை மனிதநேயத்தில் பண்ண வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்”. என்று கூறியுள்ளார்.
கே பி ஒய் பாலா சாதாரண மனிதர்களுக்கு மட்டும் ஒரு முன் உதாரணமாக இல்லாமல் பணக்காரர்களுக்கும் ஒரு முன் உதாரணமாக செயல்பட்டு வரும் பாலாவை மக்கள் பாராட்டி வருகின்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

