‘அர்த்தமற்ற வெள்ளைப்பந்து போட்டிகளில் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கலாமே’ - சுனில் கவாஸ்கர்

டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இத்தனைப் போட்டிகள்தான் ஆடுவேன் என்று பணிச்சுமையைக் குறைக்க பும்ரா முடிவெடுப்பதை விட சில அர்த்தமற்ற ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடாமல் இருக்கலாமே. அவருக்கு பிசிசிஐ இந்தத் தொடர்களிலிருந்து ஓய்வு கொடுக்கலாம் தானே என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் பும்ரா மீதமுள்ள டெஸ்ட் போட்டிகளில் ஆடி இந்திய அணியை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிக்குத் தகுதி பெறச் செய்வதுதான் முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்கிறார் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.