சூர்யா படத்திற்கு இசையமைக்கும் சுஷின் ஷியாம்!
நடிகர் சூர்யாவின் 47வது படம் குறித்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா கருப்பு திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் வெங்கட் அட்லுரி இயக்கத்தில் நடித்து வருகிறார். சூர்யா - 46 ஆக உருவாகும் இப்படத்தின் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்தது.
சூர்யா அடுத்ததாக ஆவேஷம் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் காவல்துறை அதிகாரியாக சூர்யா நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இக்கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
இந்த நிலையில், இப்படத்திற்கு பிரபல மலையாள இசையமைப்பாளர் சுஷின் ஷியாம் இசையமைக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
சுஷின் ஷியாம் இசையமைத்த கும்பளாங்கி நைட்ஸ், மஞ்ஞுமல் பாய்ஸ், ஆவேஷம் உள்ளிட்ட திரைப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: கன்னட சினிமாவை ஷெட்டிகள் ஆள்கிறார்களா? ராஜ் பி. ஷெட்டி அசத்தல் பதில்!
report suggest sushin shyam signed music director of suriya 47
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

