அவருக்கு மாற்றே இல்லை… ரோஹித் ஷர்மாவைப் புகழ்ந்த முன்னாள் வீரர்!
இந்திய அணியின் கேப்டன் (ஒருநாள் போட்டிகள்) ரோஹித் ஷர்மா டி 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். தற்போது 38 வயதாகும் ரோஹித் ஒருநாள் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்துகிறார். 2027 ஆம் ஆண்டு நடக்கவுள்ள ஐம்பது ஓவர் உலகக் கோப்பை தொடரில் விளையாடுவதுதான் அவரின் தற்போதைய நோக்கமாக உள்ளது.
ஆனால் அது எந்தளவுக்கு சாத்தியம் என்பது தெரியவில்லை. ஏனென்றால் அப்போது அவருக்கு வயது நாற்பதாக இருக்கும். ரோஹித், கோலி போல உடலை ஃபிட்டாக வைத்திருக்கும் நபரும் அல்ல. இதனால் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடக்கும் தொடரோடு அவர் ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் 2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பைவரை தொடர்ந்து விளையாடுவதுதான் ரோஹித்தின் விருப்பமாக உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் ரோஹித் சர்மாவோடு மும்பை இந்தியன்ஸ் அணியில் பல ஆண்டுகள் ஒன்றாக விளையாடிய அம்பாத்தி ராயுடு அவர் 2027 ஆம் ஆண்டு வரை விளையாட வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இது சம்மந்தமாக “உலகக் கோப்பை வரை ரோஹித் ஷர்மா இந்திய அணியில் தொடர வேண்டும். அவருக்கு மாற்றான ஒரு வீரர் இந்திய அணியில் இல்லை. அவரது பேட்டிங் இளம் வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கக் கூடியது. அவரது கேப்டன்சியும் இந்திய அணிக்கு முக்கியம்” எனக் கூறியுள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


