Coolie: கூலி படத்துக்கு நீங்க போக வேண்டாம்… அந்த பிரபாஸ் படத்தை பார்த்தாலே போதும்…

Coolie: ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் கூலி படம் குறித்து நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நெகட்டிவ் விமர்சனங்களுக்கு இடையே தற்போது படத்தின் கதையே கேள்வி குறியாக மாறி இருக்கிறது. 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்தில் ரஜினிகாந்த், நாகர்ஜூனா, ஷெளபீன், ஸ்ருதிஹாசன், சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். அமீர்கான், உபேந்திரா முக்கிய கேமியோ ரோலில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

அனிருத் இசையில் இப்படத்தின் பாடல்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் வசூல் 1000 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடிப்படை ரஜினி ரசிகர்களின் ஆசையை கூட படம் பூர்த்தி செய்ய முடியாத நிலைக்கு வந்து இருக்கிறது. 

#image_title

அதிலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இயக்கம் எப்போதுமே தனி லெவலில் இருக்கும். ஆனால் இந்த முறை அதிலும் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சி இருக்கிறது. இதனால் படம் நாளுக்கு நாள் வசூலில் பெரிய அடி வாங்கி வருகிறது. 

பல காட்சிகளில் தொடர்பு இல்லாத இன்னொரு காட்சிகளின் பிரச்னைகள் தொடங்கி பல நடிகர்களுக்கு தேவையே இல்லாத காட்சிகள் என நிறைய பிரச்னைகள் தொடர்ச்சியாக கூலி மீது கேலி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் ஒரு பேட்டியில் தான் சொன்ன கதை வேறு எடுக்கப்பட்ட கதை வேறு எனவும் குறிப்பிட்டு இருந்தார். 

இந்நிலையில் கூலி திரைப்படத்தில் தேவா என்ற கதாபாத்திரம் ஸ்ருதிஹாசனின் உயிரை காப்பாத்த தொடர்ந்து போராடுவார். அவருக்கு எதிராக மலையாள நடிகர் வில்லத்தனம் செய்து கொண்டு இருப்பார். இது கூலி படத்தின் கதை என்பது நம் எல்லாருக்குமே தெரியும். 

ஆனால் இதே கதையில் தான் 2023ம் ஆண்டு இறுதியில் வெளியான பிரசாந்த் நீல்லின் திரைப்படம் சலார் உருவாகி இருந்தது. அப்படத்தின் இரண்டாம் பாகத்தின் வேலைகள் நடந்து வருகிறது. இந்நிலையில் அந்த படமே பெரிய அளவில் வரவேற்பை பெறாத நிலையில் கூலி திரைப்படத்தின் ஏமாற்றத்துக்கு கதையே காரணம் என தற்போது நிரூபணமாகி இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.