போட்றா வெடிய!.. லோகேஷ் இயக்கும் படத்தில் ரஜினி கமல்!.. தெறி மாஸ் அப்டேட்.
Rajini Kamal: மாநகரம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் கைதி, விக்ரம், மாஸ்டர் லியோ ஆகிய படங்களை இயக்கி இளைஞர்களுக்கு மிகவும் பிடித்தமான இயக்குனராக மாறியிருக்கிறார். 5 படங்களை மட்டுமே இயக்கி 50 கோடி சம்பளம் வாங்கும் இயக்குனராக மாறியிருக்கிறார்.
ரஜினியை வைத்து இவர் இயக்கிய கூலி திரைப்படம் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றாலும் படம் வெளியாகி 5 நாட்களில் 400 கோடியை வசூல் செய்திருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. தமிழ் சினிமாவில் முதல் நாள் அதிக வசூல் செய்த இரண்டு படங்களுமே லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ மற்றும் கூலி படங்கள்தான்.

கேங்ஸ்டர் படங்களை இயக்குவதுதான் லோகேஷ் கனகராஜின் ஸ்டைல். மாநகரம் முதல் கூலி வரை அவர் இயக்கியது எல்லாமே கேங்ஸ்டர் படங்கள்தான். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள கேங்ஸ்டர் படத்தில் ரஜினி கமல் இருவரையும் நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகிறதாம். சமீபத்தில் இது தொடர்பான மீட்டிங்கும் நடந்ததாக சொல்லப்படுகிறது. இது மட்டும் நடந்தால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பெரிய விருந்து காத்திருக்கிறது.
கூலி படத்திற்கு பின் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் லோகேஷ். அடுத்து கார்த்தியை வைத்து கைதி 2 படத்தையும் இயக்கவிருக்கிறார். கமல் ரஜினி இருவரும் நடிக்க சம்மதித்தால் கைதி 2-வுக்கு முன் லோகேஷ் அந்த படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கமலோடு இணைந்து நடிக்க வேண்டும் என்கிற ஆசை ரஜினிக்கு இருக்கிறது. கூலி ஆடியோ விழாவில் ‘இந்த படத்தில் உலக நாயகனையும் லோகேஷ் கொண்டு வந்து விட்டாரா என எனக்கு தோன்றியது.. நான் அதை நினைத்து அப்படியே பறந்து கொண்டிருந்தேன்’ எனவும் பேசினார். எனவே கமலோடு இணைந்து நடிப்பதில் அவருக்கு பிரச்சனை இருக்காது. மேலும் சமீபத்தில் கார்த்தியிடம் கமலே இதுபற்றி பேசியதாக சொல்லப்படுகிறது. ‘எங்கள் படத்தை முடித்துவிட்டு லோகேஷ் உங்கள் கைதி 2 படத்திற்கு வருவார்.. உங்களுக்கு சம்மதம்தானே’ என அவர் கன்வின்ஸ் செய்ததாக சொல்லப்படுகிறது கமல் கேட்டதால் கார்த்தியும் ஒப்புக்கொண்டிருக்க வாய்ப்பிருக்கிறது.
இது நடந்தால் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே இப்படத்தை தயாரிக்கும் என சொல்லப்படுகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

