லோகேஷ் அப்படி பழி போட்டு ஓட முடியாது!… போட்டு பொளக்கும் புரடியூசர்…
இன்று தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். நான்கு பாடல், நான்கு ஃபைட், காமெடி காட்சிகள், சென்டிமென்ட் என எல்லாத்தையும் மிக்ஸ் செய்து கமர்சியல் சினிமா தான் சக்சஸ் கொடுக்கும் என்ற ஃபார்முலாவை உடைத்து, கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து அதில் சுவாரஸ்ய கதாபாத்திரம் வைத்து படத்தை நகர்த்தி வெற்றி கண்டவர் லோகேஷ். தனக்கென தனி திறமை வைத்துக்கொண்டு அதன் மூலம் இன்றைய காலத்து இளைஞர்களின் விருப்பமான இயக்குனராக வலம் வருகிறார்.
தற்போது இவர் இயக்கத்தில் வெளியான கூலி திரைப்படத்தால் கடுமையான விமர்சனங்களை பெற்று வருகிறார் . ரஜினிகாந்த், நாகார்ஜுனா, அமீர்கான் உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இசை அனிருத் அமைத்துள்ளார். அனிருத் தனது பங்கிற்கு பாடல்களையும், பின்னணி இசையும் சிறப்பாக செய்திருந்தாலும் லோகேஷ் கிடைத்த வாய்ப்பை தவறவிட்டார் என்று ரசிகர்களின் கருத்தாக உள்ளது.
இதைப் பற்றி பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கூறுகையில். “இன்னைக்கு தமிழ் சினிமா ஒரு ஹீரோ கையில்தான் இருக்கின்றது அவர் தேதி கொடுத்தால் தான் ஒரு இயக்குனருக்கும் அல்லது ப்ரொடியூஸருக்கும் வாழ்வு என்ற நிலை வந்து விட்டது. அப்படி இருக்கும்போது ஹீரோ என்ன சொல்கிறாரோ அதற்கு இயக்குனர்கள் காம்ப்ரமைஸ் செய்து கொள்கிறார்கள். தற்போது கூலி படம் பெரிதாக பேசப்படவில்லை என்றால் கூட அடுத்து அவரின் கைதி-2 படத்திற்கு பெரிய சம்பளம் கேட்கிறார்”.

”கிட்டத்தட்ட 75 கோடி ரூபாய் சம்பளம் கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு காரணம் ரஜினி தான். கைதி முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி தான் ஆனால் அதற்குப் பின் கிடைத்த மாஸ்டர் படத்திற்கு குறைந்த சம்பளமே பெற்றார். நடிகர்களும் இயக்குனர்களின் பேச்சைக் கேட்டு நடிப்பதில்லை. அவர்களுக்கு தேவையான மாற்றங்களும் செய்ய இயக்குனர்களை வற்புறுத்துகின்றனர். அந்த மாற்றங்கள் சொல்லும் பொழுது அது படத்தை பாதிக்குமா ? என்று இயக்குனர்கள் யோசிக்க வேண்டும்”.
”ஒருவேளை அப்படி மாற்றங்கள் செஞ்சி பாதிப்பு ஏற்படுமேயானால் பாதிக்கப்படுவது இயக்குனர்கள் மட்டுமே. ஹீரோக்கள் அடுத்தடுத்த படங்கள் நடித்துக்கொண்டுதான் இருப்பார்கள். கூலி ஏகப்பட்ட விமர்சனங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது. லோகேஷ் இனி கதையை பண்ண தெரியாதா? பத்து படம் மட்டும் தான் பண்ண போறேன்னு சொன்னாரு இதுதான் காரணமா? அவர்கிட்ட சரக்கு இல்லையா? என்று இன்றைக்கு லோகேஷை அடிக்க ஆரம்பித்து விட்டார்கள். நடிகர்கள் மாற்றம் சொல்கிறார்கள் என்பதற்காக படைப்பாளி முழுவதுமாக அந்தப் பழியை நடிகர்களின் மீது போடுவது எனக்கு ஏற்புடையதாக இல்லை”. என்று சொல்லி இருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

