Suriya47: சூர்யாவுடன் இணையும் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ புகழ்! இந்த தடவை என்ன ஆகப் போகுதோ?
Suriya47: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சூர்யா. இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான கங்குவா, ரெட்ரோ போன்ற திரைப்படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இருந்தாலும் அவருக்கு என ரசிகர்கள் எப்போதுமே ஆதரவு தெரிவித்து வருவதை பார்க்க முடிகிறது. அதற்கு காரணம் சூர்யாவால் பல மாணவர்கள் இன்று பலதரப்பட்ட துறையில் முதன்மையானவர்களாக இருக்கிறார்கள்.
அகரம் அறக்கட்டளை மூலமாக எத்தனையோ மாணவர்கள் நல்ல நிலமையை அடைந்திருக்கிறார்கள். இதுவே சூர்யாவின் மீது அளவுக்கதிகமான மரியாதையும் அன்பையும் ரசிகர்கள் செலுத்த காரணமாக இருக்கின்றன. தற்போது சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இன்னொரு பக்கம் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்திலும் அவருடைய 46வது படத்தில் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படம் அடுத்த வருடம் கோடை விடுமுறைக்கு வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது .ஆர் ஜே பாலாஜி இயக்கும் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் அவருடைய அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. சூர்யா நடிக்கும் 47 வது படத்தை ஜித்து மாதவன் இயக்குவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின.
ஏற்கனவே ஜித்து மாதவன் இயக்கத்தில் ஆவேசம் திரைப்படம் வெளியாகி அந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றது. அவர்தான் இப்போது சூர்யாவின் 47வது படத்தை இயக்க இருக்கிறார். இப்போது வந்த தகவல் என்னவெனில் சூர்யாவின் 47-வது படத்தில் இசையமைப்பாளர் சுசின் ஷியாம் இணைந்துள்ளதாக தெரிகிறது .மஞ்சுமல் பாய்ஸ் மற்றும் ஆவேசம் போன்ற படங்களுக்கு இசையமைத்தவர்.
அந்த இரண்டு படங்களுமே பெரிய அளவில் வரவேற்பை பெற்றன. அந்த வகையில் இப்போது சூர்யாவின் 47வது படத்திற்கும் இவர்தான் இசையமைக்க இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த படத்தை பொருத்தவரைக்கும் ப்ரீ புரடக்ஷன் முழு வேகத்தில் நடந்து வருகிறது. அதுமட்டுமல்ல இந்த படத்தில் சூர்யா ஒரு காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

