கூலி புயலிலும் அசராமல் 25 நாட்களை கடந்த தலைவன் தலைவி

விஜய் சேதுபதி, நித்யா மேனன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வெளியான படம் தலைவன் தலைவி. பாண்டிராஜ் இயக்கியுள்ள இந்த படம் கடந்த மாதம் வெளியானது. கடந்த சில வருடங்களாகவே மகாராஜாவை தவிர அனைத்து படங்களையும் தோல்வியாக கொடுத்து வந்த விஜய் சேதுபதி இப்படத்தினை மிகவும் எதிர்பார்த்தார்.

அவர் நினைத்தது போலவே தலைவன் தலைவிக்கு நல்ல வரவேற்பு இருந்தது. 100 வசூலை தொடும் என்று நினைத்துகொண்டிருக்கும்போது ரஜினியின் கூலி வெளியானது. இதன் காரணமாக பல திரையரங்குகளில் தலைவன் தலைவிக்கு காட்சிகள் குறைக்கப்பட்டது. இதனால் வசூலும் தேக்க நிலை உருவானது. ஆனாலும் வசூலில் ரூ.50 கோடியை கடந்தது இப்படம்.

#image_title

இந்த நிலையில் இப்படம் இன்று 25 நாட்களை பூர்த்தி செய்திருக்கிறது. கூலியின் எதிர்பாராத தோல்வி இப்படத்திற்கு கை கொடுக்கும் என்றே தெரிகிறது. காரணம் தலைவன் தலைவிக்கு காட்சிகள அதிகரிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.