Anupama Parameshwaran: தவறவிட்ட தமிழ் படங்களை லிஸ்ட் போட்ட அனுபமா! நல்ல வேளை நடிக்கல

Anubama Parameshwaran: மலையாளத்தில் மிகவும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இவர் தமிழில் கொடி திரைப்படத்தில் நடித்தார். அது மட்டுமல்ல பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் படத்திலும் லீடு ரோலில் நடித்தார். அதன் பிறகு இப்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இவரோட நடிப்பில் மலையாளத்தில் வெளியாக காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் பரதா.

அந்த படத்தை பிரவீன் காண்ட்ராகுலா இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் அனுபமா அந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அப்போது பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்திருந்தார் அனுபமா. அப்போது மாரி செல்வராஜை பற்றி அவர் கூறும் பொழுது மாரி செல்வராஜின் அந்த உழைப்பு மற்ற இயக்குனர்களிடம் இருந்து முற்றிலுமாக வேறுபட்டு இருக்கிறது என பாராட்டி பேசி இருக்கிறார்.

இந்த படத்திற்காக மாரி செல்வராஜ் தனித்துவமான அணுகுமுறையை கையாண்டதாகவும் கூறியிருக்கிறார். இந்த படத்திற்காக ஒரு பயிற்சியை முகாமில் தங்கி இருந்தாராம் அனுபமா. அந்த முகாமில் உள்ளூர் மக்களுடன் பழகி அவர்களின் வாழ்க்கை முறை அவர்களுடைய அனுபவங்கள் இவை எல்லாவற்றையும் புரிந்துகொள்ள தனக்கு வாய்ப்பு கிடைத்ததாக அவர் தெரிவித்திருக்கிறார்.

தன்னுடைய முந்தைய எந்த படத்திற்கும் இல்லாத ஒரு புதிய அனுபவமாக இந்த படம் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். அதனால் பைசன் திரைப்படம் தனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த திரைப்படம் ஆக இருக்கும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். மாரி செல்வராஜை பொறுத்த வரைக்கும் அவர் எடுத்த எல்லா படங்களுமே சமூக அக்கறையுடன் கூடிய கதைக்களம் ஆகவே இருக்கும்.

#image_title

அதைப்போல பைசன் திரைப்படமும் அப்படித்தான் இருக்கப் போகிறது என்றும் தெரிவித்திருக்கிறார். தன்னுடைய திரை பயணத்தில் பைசன் திரைப்படம் முக்கியமான மைல் கல்லாக இருக்கும் என நம்பிக்கையுடன் கூறி இருக்கிறார். இந்த நிலையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தான் இரண்டு படங்களை தவறவிட்டேன் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

பரியேறும் பெருமாள் படத்தில் முதலில் அனுபமா தான் நடிக்க இருந்ததாம். அந்த நேரத்தில் அவர் மலையாளத்தில் பிஸியாக இருந்ததனால் நடிக்க முடியவில்லை. அதன் பிறகு மாமன்னன் திரைப்படத்திலும் இவருக்கு வாய்ப்பு வந்திருக்கிறது. அந்த நேரத்திலும் தன்னால் நடிக்க முடியவில்லை . ஆனால் பைசன் திரைப்படத்தில் எப்படியோ நடித்து விட்டேன் எனக் கூறி இருக்கிறார். நல்ல வேலை அந்த படத்தில் நடிக்கவில்லை .ஆனால் இப்போதும் நீங்கள் வருத்தப்படுவீர்கள் என கிண்டலாக கமெண்டில் கூறி வருகிறார்கள் ரசிகர்கள்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.