கார்த்தியின் வா வாத்தியார் என்ன ஆனது?

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான வா வாத்தியார் திரைப்படத்தின் வெளியீடு தள்ளிச்சென்றபடியே இருக்கிறது.

கார்த்தி நடிப்பில் கடைசியாக வெளியான மெய்யழகன் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வெற்றிப் படமானது.

இதனைத் தொடர்ந்து, ‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ உள்ளிட்ட படங்களின் இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் ’வா வாத்தியார்’ திரைப்படத்தில் கார்த்தி நடித்து முடித்தார்.

இப்படத்தில் நாயகியாக கிருத்தி ஷெட்டியும், வில்லனாக சத்யராஜும் முக்கியக் கதாபாத்திரத்தில் ராஜ்கிரணும் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

வா வாத்தியாரின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே நிறைவடைந்த நிலையில், இன்னும் இப்படம் திரைக்கு வராமல் இருக்கிறது.

காரணம், படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் கங்குவா திரைப்படத்தின் தோல்வியால் பல சிக்கல்களைச் சந்தித்தது. குறிப்பாக, கங்குவா விநியோகஸ்தர்கள் ஸ்டூடியோ கிரீன் படத்தை வாங்க தயக்கம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.

வா வாத்தியாரின் வெளியீடு தொடர்ந்து தள்ளிச்சென்றபடி இருக்க, இதுவும் ஒரு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. நீண்ட காலம் கழித்து நலன் குமாரசாமி இயக்கிய திரைப்படம் திரைக்கு வராமல் இருப்பது ரசிகர்களிடம் ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.

இதையும் படிக்க: பாபா - கூலி! இதை கவனித்தீர்களா?

report suggest that postponed reason of actor karthis vaa vaathiyaar movie

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.