வார் 2-வை அடித்து நொறுக்கிய கூலி!.. 4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?..

Coolie Vs War2: கடந்த 14 ஆம் தேதி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த கூலி மற்றும் ஹிருத்திக் ரோஷன் ஜூனியர் என்டிஆர் இணைந்து நடித்த வார் 2 ஆகிய இரண்டு படங்களும் ரிலீஸ் ஆனது. இந்த இரண்டு படங்களுமே உலக அளவில் பல தியேட்டர்களில் வெளியானது
. தமிழ்நாட்டில் கூட கூலி படம் 700 தியேட்டர்களில் வெளியாக மீதி 200க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வார் 2 ரிலீஸ் செய்யப்பட்டது.

வார் 2 படம் வெளியானதால் ஆந்திரா மற்றும் வெளிநாடுகளில் கூலி படத்திற்கான வசூல் பாதிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களுக்கு வெளிநாடுகளில் கணிசமான வரவேற்பு உண்டு. ஆனால் நடந்தது வேறு. லோகேஷ் கனகராஜ் உடன் ரஜினி கூட்டணி அமைத்ததால் கூலி படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

#image_title

எனவே டிக்கெட் முன்பதிவிலேயே உலக அளவில் கூலி திரைப்படம் 110 கோடியை வசூல் செய்தது. படம் வெளியான பின் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் வெளிநாடுகளில் இப்படம் நல்ல வசூலை பெற்றது. துவக்கம் முதலே வார் 2 வை விட கூலி அதிக வசூலை பெற்றது.

இரண்டு படங்களும் வெளியாகி 4 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் வார் 2 திரைப்படம் 173.9 கோடி வரை வசூல் செய்திருக்கிறது. அதே நேரம் கூலி படம் 193.25 கோடி வசூல் செய்திருக்கிறது.
இது இந்தியாவில் மட்டுமே. வெளிநாடுகளிலும் வார் 2-வை விட கூலி படம் அதிக வசூலை செய்திருக்கிறது. மொத்தமாக உலக அளவில் கூலி படம் 300 கோடி வசூலை தாண்டி இருக்கலாம் என கணிக்கப்படுகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.