Siragadikka Aasai: மீனா குடும்பத்துக்கு ஸ்கெட்ச் போடும் அருண்… ஆனா இதெல்லாம் கொஞ்சம் ஓவருப்பா!

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோடு குறித்த தொகுப்புகள்.

மீனா மற்றும் முத்து இருவரும் கிரிஷின் சென்னை அட்ரஸை கண்டுபிடித்து அங்கு தேடி வருகின்றனர். ஆனால் அதற்குள் ரோகிணி வீட்டை காலி செய்துவிட்டு அட்வான்ஸையும் திருப்பி வாங்கிக்கொண்டு சென்று விட்டதாக அங்கிருந்த வீட்டின் ஓனர் சொல்லிவிடுகிறார்.

முத்து அவர்கள் எங்கே போனார்கள் என தெரியுமா என கேட்க எனக்கு அது தெரியாது. ஆனால் அந்த பையன் சாப்பிடணும்னு சொன்னான். நான் தான் மெயின் ரோட்டில் இருக்கும் ஹோட்டலை சொல்லிவிட்டேன். சீக்கிரமா போனால் அவர்களை பார்க்க முடியும் என்கிறார்.

மீனா மற்றும் முத்து இருவரும் அவசரமாக அந்த ஹோட்டலுக்கு செல்ல இன்னொரு பக்கம் ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர் ரோகிணி மற்றும் கிரிஷ். ஆனால் ஹோட்டலுக்கு வருவதற்குள் இடையில் ரோட்டில் நடந்த பிரச்சனையால் ரோகிணியை தவற விட்டுவிடுகிறார்கள் முத்து மற்றும் மீனா.

ஸ்ருதி தன்னுடைய ரெஸ்டாரன்ட் திறப்பு விழாவிற்கு அண்ணாமலை மற்றும் விஜயாவிற்கு பத்திரிகை கொடுக்கிறார். அதை வாங்கி பார்க்கும் விஜயா சந்தோஷமாக அவரை வாழ்த்துகிறார். ரெஸ்டாரன்ட்டுக்கு ஹேப்பி என பெயர் வைத்திருப்பதாக ஸ்ருதி சொல்லிக்கொண்டு இருக்கிறார்.

பின்னர் மனோஜ் மற்றும் ரோகிணியை அழைக்கும் ஸ்ருதி தன்னுடைய ரெஸ்டாரண்டிற்கு சில பொருட்கள் தேவைப்படுவதாக கூற ரோகிணியும் சம்மதம் சொல்கிறார். ஸ்ருதி நல்ல டிஸ்கவுண்ட்டில் செஞ்சி தாங்க. நானும் உங்களுக்கு ஃபுட்டில் டிஸ்கவுண்ட் தருவதாக சொல்ல மனோஜ் நக்கலாக பேசுகிறார். 

பின்னர் விஜயா மனோஜை திட்டி ஸ்ருதிக்கு செஞ்சி கொடு என கூறுகிறார். அந்த நேரத்தில் வீட்டிற்குள் வரும் முத்து மற்றும் மீனாவிற்கும் பத்திரிக்கை வைக்கும் ஸ்ருதி ரெஸ்டாரெண்ட் குறித்து பேசிக்கொண்டு இருக்கிறார். ரவி குறித்து கேட்க ஸ்ருதி முகம் வாடுகிறது. 

#image_title

அவரை சமாதானம் செய்யும் மீனா டெக்கரேஷன் ஆர்டர் குறித்து பேசி சமாதானம் செய்கிறார். பின்னர் சீதா கால் செய்து நாளை கோயிலுக்கு அழைக்கிறார். ஆனால் மீனா தனக்கு இங்கு சில முக்கியமான வேலைகள் இருப்பதாக சொல்லி அம்மா மற்றும் சத்யாவை மட்டும் அழைத்து செல்லுமாறு கூறுகிறார்.

பின்னர் முத்துவிடம் ரெஸ்டாரெண்டுக்கு டெக்கரேஷனுக்கு போகணும். நான் சீதா வீட்டுக்கு போயிட்டு வந்துடுறேன் என்கிறார். முத்துவும் சரியென சில ஆயிரங்களை அவரிடம் கொடுக்க எதுக்கு என்கிறார் மீனா. அருண் புது மாப்பிள்ளை. அவனிடம் எப்படி கேட்பாங்க. அதான் இதை கொடு என்கிறார். 

அடுத்த நாள் காலை சீதா வீட்டுக்கு வருகிறார் மீனா. அங்கே எல்லாரும் பரபரப்பாக தயாராகிக் கொண்டிருக்கின்றனர். அருண் ஒரு புது செப்பலை வாங்கி வந்து சீதாவின் அம்மாவுக்கு கொடுத்து போட்டு பார்க்க சொல்ல எல்லாரும் சந்தோஷப்படுகின்றனர். 

தொடர்ந்து, லக்கேஜ்களை எடுத்துக்கொண்டு எல்லோரும் கிளம்பி கொண்டிருக்க அம்மாவை அழைத்து மீனா முத்து கொடுத்த பணத்தை கொடுக்கிறார். இதை ஒட்டு கேட்கும் அருண் அங்கிருந்து வந்து என்னை அசிங்கப்படுத்துகிறீர்களா என்று கேட்கிறார்.

அதெல்லாம் இல்லை அம்மாவுக்காக அவர்தான் கொடுத்ததாக கூறுகிறார். நான் தானே அழைத்துக்கொண்டு போறேன் எனக்கு அவங்களை பார்த்துக்க தெரியும் என அருண் சொல்ல மற்றவர்கள் அவருக்கு எதிராக பேச கடுப்பாகிவிடுகிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.