ரஜினி விஜய்க்கு மட்டும்தானா? எனக்கு இல்லையா? ஹிந்தி நடிகரை களமிறக்கும் சூர்யா!..

Suriya46: இப்போது எல்லா நடிகர்களுக்கும் ஃபேன் இந்தியா நடிகராக வேண்டும் என்கிற ஆசை வந்துவிட்டது. அதாவது ஒரு மொழியில் உருவாகும் திரைப்படம் மற்ற மொழிகளிலும் வெளியாகி ஹிட் அடிக்கும். இதை துவங்கி வைத்தது பாகுபலி திரைப்படம். அந்த படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகங்கள் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி போன்ற 4 மொழியிலும் சூப்பர் ஹிட் அடித்து வசூலை அள்ளியது. அதேபோல் கே.ஜி.எப் கே.ஜி.எப் 2, காந்தாரா. ஆர்.ஆர்.ஆர், புஷ்பா, புஷ்பா 2 போன்ற படங்களும் பேன் இந்தியா படமாக வெளியாகி வசூலை அள்ளியது.

பேன் இந்தியா நடிகராகிவிட்டால் சம்பளத்தை பல மடங்கு ஏற்றி விடலாம் என கணக்கு போட்ட கோலிவுட் நடிகர்களும் தங்கள் படங்களில் பல மொழிகளில் இருந்தும் நடிகர்களை களம் இறக்கி நடிக்க வைத்து வருகிறார்கள். தனுஷ் கூட தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் உருவான குபேரா படத்தில் நடித்தார்.

இதையெல்லாம் எப்போதும் செய்யாத ரஜினி கூட ஜெயிலரில் மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோரை நடிக்க வைத்தார். அதனால் அப்படம் 650 கோடி வரை வசூல் செய்தது. அதே பார்முலாவைத்தான் இப்போது கூலி படத்திலும் செய்திருக்கிறார்கள். இந்த படத்தில் நாகார்ஜுனா, சௌபின் சாகிர், உபேந்திரா ஆகியோர் நடித்திருந்தாலும் பாலிவுட்டில் இருந்து அமீர்கானையும் கொண்டுவந்து ஒரு கேமியோ வேடத்தில் நடிக்க வைத்தார்கள்.

#image_title

இந்நிலையில் நடிகர் சூர்யாவும் இதை செய்ய தொடங்கிவிட்டார். கருப்பு படத்திற்கு பின் சூர்யா இப்போது தெலுங்கு பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளில் ஹிந்தி நடிகர் அனில் கபூரை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளனர். இதை பார்க்கும்போது இந்த படம் தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகும் என கணிக்கப்படுகிறது. சூர்யா தனது கங்குவா படத்தில் பாலிவுட் நடிகர் பாபி தியோலை வில்லனாக நடிக்க வைத்தார். ஆனால் அந்த படம் ஓடவில்லை. இந்நிலையில்தான் புதிய படத்தில் அனில்கபூரை களம் இருக்க திட்டமிட்டு இருக்கிறார்.

விரைவில் இப்படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட உள்ளது. துல்கர் சல்மானை வைத்து வெங்கி அட்லூரி இயக்கிய லக்கி பாஸ்கர் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.