அந்தப் படம் பார்த்துட்டு ரஜினி அழுதுட்டான்.. நண்பர் சொன்ன பிளாஷ்பேக்..
Rajnikanth: பெங்களூரில் பேருந்து நடத்தினராக வேலை செய்த ரஜினி சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு சென்னை வந்து திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தார். அதன்பின் பாலச்சந்தரின் அறிமுகம் கிடைத்து அவர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படம் மூலம் சினிமாவில் நடிக்க தொடங்கினார். அந்த படத்திற்கு பின் தொடர்ந்து பாலச்சந்தரின் படங்களில் நடித்த ரஜினி மற்ற இயக்குனர்களின் படங்களிலும் நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
இவருக்கு ரசிகர்களும் உருவானார்கள். இதுவரை எந்த நடிகரிடமும் பார்க்காத ஸ்டைல் ரஜினியிடம் இருந்தது. அதுவே அவருக்கு ரசிகர்களை பெற்று தந்தது. ஒரு கட்டத்தில் அவருக்கு சூப்பர் ஸ்டார் என்கிற பட்டமும் கிடைத்தது. இப்போது வரை அந்த பட்டம் அவரிடம்தான் இருக்கிறது. கடந்த 50 வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறார் ரஜினி.

சினிமாவில் 50 வருடங்களாக ஒரு நடிகர் தாக்கு பிடிப்பது என்பது சாதாரணமில்லை. திறமை, உழைப்பு, நம்பிக்கை எல்லாவற்றையும் தாண்டி காலத்திற்கு ஏற்ற படங்களை கொடுப்பது மற்றும் ரசிகர்களின் ஆதரவை தக்க வைத்திருப்பது இது எல்லாமே ரஜினிக்கு கை வந்திருக்கிறது. இது அபூர்வமாக சிலருக்கு மட்டுமே அமையும்.
சமீபத்தில் அவரின் கூலி திரைப்படம் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படம் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் குறை வைக்கவில்லை. உலகம் முழுவதும் இப்படம் மூன்று நாட்களில் 250 கோடி வரை வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில்தான் ரஜினியின் நண்பர் ராஜ் பகதூர் சில தகவல்களை ஊடகங்களிடம் பகிர்ந்து கொண்டார். ரஜினி பெங்களூர் சிட்டி பேருந்து நிலையத்தில் கண்டக்டராக வேலை செய்த போது ராஜ் பகதூர் டிரைவராக வேலை பார்த்தவர் ரஜினியின் நெருக்கமான நண்பர்.
ரஜினி பற்றி பேசிய ராஜ் பகதூர் ‘ரஜினியின் பேருந்தில் மிகவும் விரைவாக டிக்கெட் கொடுத்து விடுவான். பேருந்து நின்று விட்டால் உடனே சிகரெட் பற்ற வைத்துக் கொள்வா.ன் நிறைய சிகரெட் குடிப்பான். அவனிடம் ஒரு ஸ்டைல் இருக்கும். தான் முதல் முதலில் நடித்த அபூர்வராகங்கள் படத்தை பார்த்துவிட்டு சந்தோஷத்தில் ரஜினி அழுதான்.. ‘ஏன் அழுகிறாய்?.. நீ இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது’ என்று சொன்னேன் என அவர் சொல்லியிருக்கிறார். மேலும், ‘முடியை டைலாக கோதி கோதியே முடி எல்லாம் கொட்டி அவனுக்கு சொட்டையாகிவிட்டது’ என ஜாலியாவும் பேசியிருக்கிறார் ராஜ் பகதூர்.
ரஜினியிடம் இருந்த ஒரு நடிகனை கண்டுபிடித்தவர் ராஜ் பகதூர்தான். அது மட்டுமல்ல.. ரஜினி மீது நம்பிக்கை வைத்த முதல் நபரும் இவர்தான். சென்னை சென்று நடிப்பு கல்லூரியில் சேர்ந்து அந்த தங்கி படிக்க வேண்டுமென்றால் பணம் தேவைப்படும்.. அதற்காக தான் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை கழட்டி கொடுத்தவர் ராஜ் பகதூர்.. அது மட்டுமல்ல ஒவ்வொரு மாதமும் தனது சம்பளத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை ரஜினியின் செலவுக்காக அனுப்பியிருக்கிறார். அதோடு ரஜினி துவண்டு போன போதெல்லாம் அவருக்கு நம்பிக்கை கொடுத்து அவருக்கு அவரை உற்சாகப்படுத்தியவரும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

