Coolie Movie : நான் சொன்ன கதை வேற! ‘கூலி’ கதை வேற.. இப்படி சொதப்பிட்டீங்களே லோகேஷ்?
Coolie movie: கூலி படம் வெளியான மூன்று நாள்களில் வசூலில் சாதனை படைத்திருக்கிறது. எப்பொழுதுமே ரஜினி படம் ரிலீஸ் என்றாலே ஏதாவது ஒரு வகையில் ரிக்கார்டை பிரேக் செய்து விடும். அல்லது புதிய ரிக்கார்டை உருவாக்கிவிடும். இதைத்தான் கலாநிதி மாறன் மேடையில் பேசும் போது ரஜினி எப்போதுமே ரிக்கார்டு மேக்கர் என்று கூறியிருந்தார். அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் வெளியான முதல் நாளில் அதிக அளவு வசூல் செய்த முதல் படமாக கூலி படம்தான் பெருமையை பெற்றிருக்கிறது.
அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக ரஜினி விஜய் என்ற ஒரு போட்டி சென்று கொண்டிருக்கின்றது. விஜய் நடிப்பில் வெளியான லியோ படம் அதிகளவு வசூலை அடைந்தது. அதை கூலி படம் முறியடித்துவிட்டதாக ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.இந்த வகையில் கூலி படம் வெளியான மூன்று நாள்களில் உலகளவில் 230 கோடியை அடைந்துவிட்டதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது.
ஆனால் எதிர்பார்த்ததையும் விட இந்தப் படம் குறைவான வசூலைத்தான் பெற்றுள்ளது. இந்த நிலையில் தற்போது லோகேஷின் ஒரு பேட்டி வைரலாகி வருகின்றது. ரஜினியிடம் படத்தின் ஸ்கிரிப்டை சொல்லும் போது ரஜினிக்கு மிகவும் பிடித்துவிட்டதாம். லோகேஷுக்கும் அந்த ஸ்கிரிப்ட் மிகவும் பிடித்துப் போனதாம். சரியாக இரண்டு மாதங்கள் கழித்து மீண்டும் ரஜினிக்கு போன் செய்திருக்கிறார் லோகேஷ்.
சார் நாம வேற ஒரு கதை பண்ணுவோம் என்று சொல்லியிருக்கிறார் லோகேஷ். அதுதான் கூலியாம். ஏனெனில் முதலில் சொன்ன கதையில் ஏதோ ஒரு இடத்தில் ஆர்வம் குறைவாக இருப்பதை உணர்ந்திருக்கிறார். அதனால் இன்னும் அதை டெவலெப் பண்ண வேண்டும் என்றால் இன்னும் நாள்கள் அதிகமாகும். ரஜினியின் கால்ஷீட்டை வீணடிக்க கூடாது என்ற காரணத்தினால்தான் இரண்டாவதாக நினைத்த கதையை பண்ணியிருக்கிறார் லோகேஷ். அதுதான் இப்போது ரிலீஸான கூலி கதை.
எப்படி இருந்தாலும் கூலி படத்திற்கும் நெகட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.அவரவர் கடும் உழைப்பைப் போட்டுத்தான் படத்தை எடுத்திருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் தனித்தனியான கருத்துக்கள் இருக்கும். அதுக்காக ஒட்டுமொத்த படமும் நன்றாக இல்லை என்று யாரும் யாருக்கும் சொல்ல முடியாது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

