அடுத்த படம் இப்படிதான் இருக்கணும்!.. ஆதிக்கிற்கு அஜித் போட்ட கண்டிஷன்!…
AK64: ஜிவி பிரகாஷை ஹீரோவாக வைத்து திரிஷா இல்லனா நயன்தாரா படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். அந்தப் படத்திற்குப் பின் அவர் சில படங்களை இயக்கினாலும் அவை வெற்றி படமாக அமையவில்லை. சிம்புவை வைத்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்கிற படத்தை எடுத்தார். சிம்பு கொடுத்த டார்ச்சரில் படத்தை சரியாக முடிக்காமல் வெளியிட வேண்டியதாயியிற்று. அதனால அந்த படம் ஓடவில்லை. பிரபுதேவாவை வைத்து பகீரா என்கிற படத்தை இயக்கினார். அதுவும் ஓடவில்லை.
நேர்கொண்ட பார்வை படத்தில் ஒரு சின்ன வேடத்தில் நடித்த போது அஜித்துடன் பழக்கம் ஏற்பட்டது. தீவிர அஜித் ரசிகரான ஆதிக் ’உங்களை வைத்து ஒரு படம் இயக்க ஆசைப்படுகிறேன்’ என அவரிடம் சொல்ல ‘ஒரு நல்ல ஹிட் படத்தை கொடுத்து விட்டு வா.. பார்ப்போம்’ என அஜித் சொல்லிவிட்டார். அதன்பின் சில வருடங்கள் கழித்து விஷால் எஸ்.ஜே சூர்யா ஆகியோரை வைத்து ஆதிக் இயக்கிய படம்தான் மார்க் ஆண்டனி. கேங்ஸ்டர் கதையில் டைம் மெஷின் எல்லாம் வைத்து அத்தலான திரைக்கதை அமைத்து படத்தை சிறப்பாக இயக்கி இருந்தார் ஆதிக். இப்படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த போக படம் ஹிட் அடித்தது.
எனவே ஆதிக் இயக்கத்தில் நடிக்க முன் வந்தார் அஜித். அப்படி உருவான திரைப்படம் தான் குட் பேட் அட்லி. அஜித் ரசிகரான ஆதிக் அஜித்திடம் எதையெல்லாம் ரசித்தாரோ அதையெல்லாம் இந்த படத்தில் கொண்டு வந்தார். எனவே இப்படம் அஜித் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போனது. இதற்கு முன் அஜித் நடித்த பல படங்களின் ரெஃப்ரன்ஸும் இந்த படத்தில் இருந்தது அஜித்தை மிகவும் அழகாக காட்டி படத்தை ஹிட் செய்ய வைத்தார் ஆதிக்.

அதைத்தொடர்ந்து அடுத்து தனது அடுத்த படத்தையும் இயக்கும் வாய்ப்பை ஆதிக்கிடம் கொடுத்தார் அஜித். இது குட் பேட் அட்லி போல இருக்குமா என்கிற கேள்விக்கு ‘ஏற்கனவே அதை செய்து விட்டோம்.. மீண்டும் அதை ஏன் செய்ய வேண்டும்? இந்த படம் ஒரு புது கதையில் இருக்கும்’ என ஆதிக் சொன்னார்.
இந்நிலையில் ஒரு புதிய தகவல் வெளியே கசிந்திருக்கிறது. ‘எனக்காக ஒரு கதையை எழுதாதே.. உன் கதையில் நான் இருக்க வேண்டும்’ என சொல்லி இருக்கிறார் அஜித். எனவே ஒரு நல்ல கதையை உருவாக்கி வருகிறார் ஆதிக். அதேநேரம் கண்டிப்பாக அது அஜித்துக்கு பொருந்துவது போல இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

