3 நாட்களில் இவ்வளவு கோடியா?.. பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பும் கூலி..

Coolie: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, சத்யராஜ், நாகார்ஜுனா. சௌபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த 14ஆம் தேதி வெளியான திரைப்படம்தான் கூலி. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். லோகேஷ் கனகராஜ் முதன் முறையாக ரஜினியோடு இணைந்ததால் இந்த படத்திற்கு பெரிய ஹைப் உருவானது. எனவே ரிலீசுக்கு 5 நாட்களுக்கு முன்பு உலகம் எங்கும் முன்பதிவு துவங்கியது.

உலகம் முழுவதும் முன்பதிவிலேயே இப்படம் 110 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.
அதேநேரம் படம் வெளியான பின் அதிக அளவில் இப்படத்திற்கு எதிர்மறை விமர்சனங்களும் வந்தது. படத்தில் ரஜினி இருந்தாலும் சௌபின் சாஹிர், ஸ்ருதிஹாசன் ஆகியோர் நன்றாக நடித்திருந்தாலும் படத்தின் கதை, திரைக்கதை அழுத்தமாக இல்லை என விமர்சகர்கள் மட்டும் இல்லாமல் ரசிகர்களும் சொன்னார்கள். இந்த கருத்தை பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

ஆனால் மூன்று நாட்கள் தொடர்ந்து விடுமுறை என்பதாலும், ரஜினி படம் என்பதாலும் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்கிற ஆர்வம் எல்லோருக்கும் இருந்தது. இதன் காரணமாக இப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. ஏற்கனவே படம் வெளியாகி இரண்டு நாட்களில் 152 கோடி வசூல் செய்திருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்ததொ.

தற்போது படம் வெளியாகி மூன்று நாட்கள் ஆகிவிட்ட நிலையில் கூலி திரைப்படம் இந்தியாவில் மட்டும் 158 கோடியை வசூல் செய்திருக்கிறது. வெளிநாடுகளில் ஏற்கனவே 76 கோடிவரை இப்படம் வசூல் செய்திருந்தது. எப்படியும் தற்போது அது 80 கோடியை தாண்டியிருக்கும் என வைத்துக் கொண்டால் இந்த மூன்று நாட்களில் உலகம் எங்கும் கூலி படம் 230 கோடிக்கும் மேல் வசூல் செய்திருக்கும் என கணிக்கப்படுகிறது..

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.