கூலி படத்தின் லாஜிக் ஓட்டைகள்!.. ரசிகர்கள் எழுப்பும் கேள்விகள்.. பதில் சொல்வாரா லோகேஷ்?…

Coolie: ரஜினிகாந்த் நடிப்பில் உருவான கூலி திரைப்படம் கடந்த 14ஆம் தேதி உலகமெங்கும் சுமார் 7000 தியேட்டர்களில் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிய படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க அனிருத் படத்திற்கு இசையமைத்திருந்தார். மேலும் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா, சௌபின் ஷாகிர், உபேந்திரா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். மேலும் ஹிந்தி பட நடிகர் அமீர்கான் ஒரு கேமியா வேடத்தில் நடித்திருந்தார். கூலி படத்திற்கு ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. எனவேதான் முன்பதிவிலேயே இப்படம் 110 கோடி வரை வசூல் செய்தது.

படம் வெளியானவுடன் இப்படத்திற்கு நிறைய நெகட்டிவ் விமர்சனங்களும் வந்தது. பல காட்சிகளிலும் லாஜிக் இல்லை. கதை திரைக்கதையில் அழுத்தம் இல்லை. சௌவுபின் சாஹிர் கதாபாத்திரம் மட்டுமே நன்றாக இருக்கிறது. ஸ்ருதிஹாசன் நன்றாக நடித்திருந்தாலும் மற்ற கதாபாத்திரங்கள் எல்லாம் சரியாக உருவாக்கப்படவில்லை என்றெல்லாம் விமர்சகர்களும், ரசிகர்களும் பேசினார்கள்.

பொதுவாக ரஜினி படங்களில் லாஜிக் எல்லாம் ரசிகர்கள் பார்க்க மாட்டார்கள். ஏனெனில் ரஜினியின் நடிப்பிலும் அவர்களின் ஸ்டைலிலும் லாஜிக் கோட்டைகள் ரசிகர்களின் கண்களுக்கு தெரியாமல் போகும். அப்படியே இருந்தாலும் ‘இது ரஜினி படம்தானே’ என கன்வின்ஸ் ஆகிவிடுவார்கள். ஆனால் கூலி படத்தில் ரசிகர்களே பல லாஜிக் ஓட்டைகளை கண்டுபிடித்து கேள்வி எழுப்பும் அளவுக்கு சொதப்பியிக்கிறார் லோகேஷ்.

loki
loki

ஒரு சாதாரண கூலியாக வேலை செய்து வந்த ரஜினி சொந்தமாக ஒரு லாட்ஜை நடத்தும் அளவுக்கு எப்படி வசதியானவராக மாறினார்?

ரஜினியை பார்த்தால் ஸ்ருதிஹாசனுக்கு ஏன் கோபம் வருகிறது?.. அதன் பின்னணி என்ன?..

ஹார்பரையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும், யாருக்கும் பயப்படாத, போலீஸ், சிபிஐ என எல்லோரும் யாராக இருந்தாலும் கொன்றுவிடும் டெரர் வில்லனான நாகார்ஜுனா கொன்ற உடல்களை ஸ்போஸ் செய்ய தெரியாமல் ஏன் தடுமாறுகிறார்? நடுராத்திரியில் சத்யராஜை எழுப்பி ஏன் உதவி கேட்கிறார்?..

ஒரு ஹார்பரில் இவ்வளவு பேரை கொன்று குவிக்கிறார்கள்.. இதயத்தை கடத்துகிறார்கள்.. தங்கம் கடத்துகிறார்கள்.. ஆனால் மருந்துக்கு கூட ஒரு இடத்தில் கூட போலீஸ் காட்டப்படவில்லை ஏன்? போலீஸ் என்னதான் செய்கிறது?..

தன்னுடைய அப்பா சத்யராஜ் தன்னிடம் பணம் இல்லாத காரணத்தால் மருத்துவ படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டதாக ஸ்ருதிஹாசன் சொல்கிறார் ஆனால் பிணங்களை எரிப்பதற்காக நாகார்ஜுனாவிடம் சத்யராஜ் கட்டு கட்டாக பணம் வாங்குவது போல் காட்சிகள் வருகிறது.. அந்த பணத்தை சத்யராஜ் என்ன செய்தார்?..

coolie
coolie

30 வருடங்களுக்கு முன்பு பார்த்த ரஜினியை ஒரே பார்வையில் அமீர்கான் எப்படி கண்டுபிடிக்கிறார்?..

30 வருடங்களாக ரஜினியின் ஒரு விசிலுக்காகவா காத்திருக்கிறார் உபேந்திரா?

சௌபின் சாஹிர் ஸ்ருதிஹாசனை மறைத்து வைத்திருக்கும் இடத்தையும் சௌபின் மறைந்திருக்கும் இடத்தையும் ரஜினி எப்படி உடனே கண்டுபிடிக்கிறார்?..

தன்னுடைய லாட்ஜில் நன்றாக சண்டை போடும் டெரரான 18 பேர் இருந்தும் மொக்கையான மூன்று பேரை ஏன் ஸ்ருதிஹாசனை கண்டுபிடிக்க ரஜினி அனுப்புகிறார்?..

இப்படி பல கேள்விகளை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் எழுப்பி வருகிறார்கள். இந்த கேள்விகளுக்கெல்லாம் லோகேஷ் கனகராஜ் பதில் சொல்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.