Vijay TV Promo: மீனாவிடம் சிக்கும் ரோகிணி அம்மா… மயிலுக்கு நடக்கும் திடீர் அதிர்ச்சி… என்ன நடந்தது?

Vijay TV Promo: விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட் சீரியலான சிறகடிக்க ஆசை மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 நிகழ்ச்சியின் இந்த வார எபிசோட்களுக்கான வார புரோமோ ரிலீஸ் செய்யப்பட்டு இருக்கிறது. 

சிறகடிக்க ஆசை சீரியலில் கடந்த ஒரு வாரமாக ரோகிணி அம்மா காணாமல் போன கதைகளம் நடந்து வருகிறது. இதனால் கிரிஷை வீட்டில் வைத்துக்கொள்ள முத்து மற்றும் மீனா முடிவெடுத்தனர். ஆனால் ரோகிணி சாதூர்யமாக கிரிஷை பள்ளியில் இருந்து அழைத்து வந்து விட்டார். 

அந்த பள்ளியில் இருந்து போர்டிங் பள்ளிக்கு அவரை மாற்ற முடிவெடுத்து அதற்கான வேலையை பார்த்துக்கொண்டு இருக்கிறார். 

இதற்கிடையில் பார்வதி மற்றும் சிந்தாமணியுடன் யோகா கிளாஸுக்கான பத்திரிக்கை கொடுக்க செல்லும் விஜயா ரோட்டில் அவர் அம்மாவை காண அதை வீட்டில் வந்து சொல்கிறார். இதனால் முத்து மற்றும் மீனா அவரை தேட துவங்குகின்றனர். 

தற்போது விஜயா வீட்டில் இருக்கும் கிரிஷை ஃபோர்டிங் பள்ளிக்கு மாற்ற முடிவெடுத்து அதற்கு அட்மிஷன் வாங்கி விடுகிறார் ரோகிணி. தற்போது கிரிஷை அந்த பள்ளிக்கு அழைத்து சென்று விடுகிறார். ஆனால் கிரிஷ் தான் அங்கு தங்க மாட்டேன் என அடம் பிடிக்கிறார். 

இதற்கிடையில் ரோட்டில் மீனா, ரோகிணியின் அம்மாவை பார்த்து விடுகிறார். கிரிஷும் அவர் அம்மாவும் எங்கே எனக் கேட்கிறார். இதனால் வரும் வார எபிசோட்களில் மேலும் ரோகிணிக்கு பிரச்னை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கடந்த சில வாரங்களாகவே இந்த பரபரப்பும் இல்லாமல் சென்று கொண்டிருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டு தொடரில் இந்த வார ப்ரோமோ மிகப்பெரிய டுவிஸ்டை தாங்கி வந்திருக்கிறது. அதன்படி தங்கமயில் கர்ப்பமாக இருப்பதாக எல்லோரும் சந்தோஷமாக இருந்து வந்தனர்.

#image_title

இந்நிலையில் தங்கமயில் கர்ப்பத்தை மருத்துவரிடம் செக் செய்ய எல்லாரும் அழைத்து வந்திருக்க அவரை பரிசோதித்து விட்டு இவருடைய கர்ப்பம் உண்மையில்லை அது தவறாக வந்திருப்பதாக சொல்லிவிட குடும்பத்தினர் அதிர்ச்சி அடைகின்றனர்.

வீட்டில் தங்கமயில் சரவணனிடம் அழுது கொண்டே கவலையாக பேச அவர் ஏற்கனவே நிறைய பொய் சொல்லி இருக்க இப்போ இதுவா? உனக்கு இந்த விஷயத்தை பொய் சொல்ல உனக்கு எப்படி மனசு வந்துச்சு எனக் கேட்க அவர் அதிர்ச்சியாகி நிற்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.