உதவி இயக்குனர் To நடிகர்!.. கூலியில் கலக்கிய சௌபின் சாஹிர்!.. ஒரு அலசல்…
Soubin Sahir: நடிகர், கதாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர் என மலையாள சினிமா உலகில் பல முகங்களைக் கொண்டவர் சௌபின் சாஹிர். மல்லுட்டில் உதவி இயக்குனராக தனது கெரியரை துவங்கியவர் சௌபின் சாஹிர். பிரண்ட்ஸ் படத்தை இயக்கிய சித்திக் ம்ற்றும் பாசில் உள்ளிட்ட பல முக்கிய இயக்குனர்களிடம் பல படங்களிலும் இவர் உதவி இயக்குனராக வேலை செய்திருக்கிறார்.
முதன் முதலில் பாசில் பாசில் இயக்கிய Kaiyethum Doorath என்ற படத்தில்தான் நடித்தார். அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் படத்தில் பிடி ஆசிரியராக வந்து காமெடி செய்தார். அது ரசிகர்களிடம் வரவேற்பை பெறவே சார்லி உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதில் கும்பலாங்கி நைட்ஸ் படத்தில் நல்ல வேடம் கிடைத்தது. இதில் Sudani from Nigeria படத்திற்காக கேரளா அரசின் சிறந்த நடிகர் விருதை வாங்கினார்.

கும்பலாங்கி நைட்ஸ் படத்தில் இவரின் நடிப்பை பலரும் பாராட்டினார்கள். சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தையும் துவங்கி மஞ்சுமெல் பாய்ஸ் என்கிற படத்தை தயாரித்தார். இந்த படத்தில் இவர் முக்கிய இடத்தில் நடித்தும் இருந்தார். கேரள சினிமா வரலாற்றில் முதல் 200 கோடி வசூல் செய்தது இந்த படம்தான். மலையாளத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் தமிழ்நாட்டிலும் நல்ல வசூலை பெற்றது.
தற்போது கூலி திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமாகி இருக்கிறார். இந்த படத்தில் பகத் பாசிலை நடிக்க வைப்பது தான் லோகேஷின் முதல் சாய்சாக இருந்தது. ஆனால் மாரீசன் படத்தின் நடிப்பதற்காக இந்த படத்தில் நடிக்க மறுத்தார் பகத் பாசில்.. இந்த படத்தில் முக்கிய வில்லனாக நாகார்ஜுனா இருந்தாலும் அவரின் அடியாள் தயாவாக வரும் சௌபின் சாகிர் சாஹிருக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவரும் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி ஸ்கோர் செய்து அசத்தியிருக்கிறார். இந்த படத்தில் ரஜினியை விடவும் அவருக்கு அதிக காட்சிகள் இருப்பதாக பலரும் சொல்கிறார்கள்.

பகத் பாசிலுக்கு பதிலாதான் இவரை நடிக்க கூட்டிட்டு வந்தாங்க.. ஆனா இவரை தவிர வேறு யாரையும் யோசிக்க முடியாத அளவுக்கு பர்ஃபார்மன்ஸ் பண்ணி அசத்தியிருக்கார்.. படத்தோட வில்லன் கேரக்டரை முழுசா இவரை வச்சு எழுதி இருந்தா கூட செமையா இருந்திருக்கும்’ என பலரும் டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் எழுதி வருகிறார்கள். அந்த அளவுக்கு நடிப்பில் மிரட்டி பாராட்டை வாங்கி இருக்கிறார் சௌபின் சாஹிர்.

கேரளாவில் முன் பதிவில் அதிக வசூல் செய்த தமிழ் படமாகவும் கூலி இருக்கிறது. இப்படி மலையாள சினிமாவில் சாதனைகளை உண்டாக்கி வருகிறார் சௌபின் சாஹிர். கூலி படத்திற்கு பின் தமிழ்நாட்டிலும் இவருக்கு ரசிகர்கள் உருவாகி விட்டார்கள். தொடர்ந்து இவரை தமிழ் சினிமாவில் இனிமேல் பார்க்கலாம். நடிப்புக்கு தீனி போடும் நல்ல கதைகளில் நடித்தால் கோலிவுட்டிலும் ஒரு முக்கியமான நடிகராக சௌபின் மாறுவார் என்பதில் சந்தேகமில்லை.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

