இட்லிகடைக்கு என்னாச்சு? ரிலீஸ் தள்ளிப் போகுமா? பிரபலம் சொன்ன நெத்தியடி பதில்!

இட்லி கடை முதலில் ஏப்ரல் 10ல் ரிலீஸ் ஆவதாக இருந்தது. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸால இட்லி கடை படத்தோட ரிலீஸ் தேதியைத் தள்ளி வச்சாங்க. தொடர்ந்து அக்டோபர் 1க்கு ரிலீஸ் என அறிவிப்பு வெளியானது. இந்தச் சூழலில் தற்போது இட்லி கடை படத்தின் சூட்டிங் நடந்துள்ளது. இன்னும் ஒரு மாதமே உள்ள சூழலில் சூட்டிங்கும் நடக்கிறது. எப்படி படம் வெளியாகும் என ரசிகர்கள் மத்தியில் ஒரு சின்ன சந்தேகம் எழுந்துள்ளது. அதற்கு பிரபலம் ஒருவர் பதில் சொல்கிறார். வாங்க என்ன விவரம்னு பார்ப்போம்.

தனுஷ் இயக்கத்தில் அக்டோபர் 1ம் தேதி ரிலீஸ். அது சம்பந்தமா நிறைய போஸ்டர் எல்லாம் ஒட்டிருக்காங்க. ஆனா கடந்த வார இறுதியில கூட அந்தப் படத்தோட சூட்டிங் நடந்துருக்கு. எப்படி சார் இந்தப் படம் ரிலீஸ் ஆகுமா? ஆகாதான்னு சந்தேகத்துல ரசிகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேட்கிறார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.

சினிமா இன்டஸ்ட்ரியைப் பொறுத்த வரைக்கும் சின்ன பொறி கிடைச்சா அதை ஊதி ஊதிப் பெரிசாக்கிடுவாங்க. ஏதோ இட்லி கடை படத்தோட சூட்டிங் பத்து, பதினைஞ்சு நாள் தொடர்ந்து நடந்ததுன்னா இது மாதிரி அந்தப் படம் வருமா, வராதான்னு சந்தேகம் வருவதற்கு நியாயமான வாய்ப்பு இருக்கு. அந்தப் படத்துக்கு சூட்டிங் நடந்தது ஒரே ஒரு நாள்.

எந்தப் படமாக இருந்தாலும் ஒரு பேட்ச் ஒர்;க்குங்கறது இருக்கும். இது எல்லா படத்துக்கும் இருக்கும். சில இடத்துல வந்து காலண்டர் ஷாட்டை விட்டுருப்பாங்க. ஹீரோயின் குளோசப் சீனை விட்டுருப்பாங்க. ஹீரோ ஆக்ரோஷமா திரும்பிப் பார்க்குறதை விட்டுருப்பாங்க.

idli kadai

இதுமாதிரி சின்ன சின்ன வேலைகள் இருக்கும். அதுமாதிரி ஒரு நாள் சூட்டிங் தான் சமீபத்தில் நடந்தது. அதனால இட்லி கடை படத்தோட வெளியீடு நிச்சயமா பாதிக்கப்படாது. இந்தப் படத்தோட ஹீரோயின் நித்யா மேனன் டப்பிங்ல தான் இருக்காங்க. எனக்குத் தெரிஞ்சி இன்னும் ஓரிரு நாள்ல டப்பிங்கே பேசி முடிச்சிடுவாங்க. அதனால கண்டிப்பா அக்டோபர் 1ல படம் ரிலீஸ் ஆகிடும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.