கூலி A படம் தான்… ஆனாலும் ரஜினி விஷயத்தில் மிஸ் ஆகிடுச்சே..! தவிக்கும் திரையரங்க உரிமையாளர்கள்!
கடந்த வாரம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான படம் கூலி. ரஜினியின் நடிப்பில் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு பெரிய ஹைப் இருந்தது. ஆனா படம் வெளியானதுக்குப் பிறகு அந்த ஹைப்புக்கு ஏத்த மாதிரி இல்லன்னு சொல்றாங்க. ஆனாலும் நிறைய யூடியூப் சேனல்கள்ல படத்திற்கு நெகடிவா தான் விமர்சனம் வந்தது. ஆனாலும் படத்தோட வசூலுக்கு ஒரு சதவீதம் கூட அது பாதிப்பை ஏற்படுத்த வில்லை.
ரஜினிக்கு இருக்குற செல்வாக்குன்னு தான் இதை சொல்ல வேண்டும். சாதாரணமாக இது போன்ற நெகடிவ் விமர்சனங்கள் நிச்சயமா ஒரு படத்தைப் பாதிக்கும். கங்குவா, தங்கலானையே நாம் சொல்லலாம். ஆனால் அது ரஜினிகாந்த் முன்பு எடுபடவில்லை.
இந்தப் படத்தைப் பொருத்த வரைக்கும் எந்த ஒரு விமர்சனத்தாலும் பாதிக்கப்படலன்னா அதுக்கு முக்கியமான காரணம் ரஜினி தான். அவரைப் பார்;த்தா போதும்னு நிறைய ரசிகர்கள் திரையரங்கிற்கு வர்றாங்க. இந்தப் படத்தை எடுத்தவங்க, இயக்கியவங்க எல்லாம் இன்னும் நல்ல கதையோட ஒரு படத்தைக் கொடுத்துருந்தா நிச்சயமா 1000 கோடியை அடிச்சிருக்கும். இந்தப் படத்துக்கு ஏ சர்டிபிகேட் கிடைச்சதும் வசூல்ல பாதிக்கும்னு நினைச்சாங்க. ஆனா அதுவும் பாதிக்கலை.
படத்துல இதுக்கு முன்னாடி லோகேஷ் எடுத்த அளவு தான் வன்முறைக் காட்சி இருக்கு. இந்தப் படத்துக்கு ஏ சர்டிபிகேட் கொடுத்துருக்க வேண்டியது இல்லைங்கறதுதான் பலரது கருத்தாகவும் உள்ளது. ஏ சர்டிபிகேட் வந்ததும் நிறைய பாதிக்கும்னு நினைச்சாங்க.

ஆனா அப்படி பாதிக்கவே இல்லை. ஏன்னா இந்தப் படத்தைப் பொருத்த வரைக்கும் குடும்பத்தோட வர்றாங்க. அவங்க கூட குழந்தைகளையும் கூட்டிட்டு வர்றாங்க. குழந்தைகளை விட முடியாதுன்னு சொன்னா அவங்களை எங்கே கொண்டு போய் விடுறதுன்னு தகராறு பண்றாங்க. ஒரு குடும்பம் தகராறு பண்ணினா சமாளிச்சிடலாம்.
50, 60 குடும்பம் இப்படி தகராறு பண்ணினா எப்படி சமாளிக்கிறது? பல திரையரங்குகள்ல கேட்டை உடைச்சிக்கிட்டு வந்துடறாங்களாம். அதனாலயே ஏ சர்டிபிகேட்டைத் தாண்டி அவங்களை அனுமதிக்க வேண்டியதாகப் போச்சுன்னு ஒரு திரையரங்கு உரிமையாளர் சொல்கிறாராம்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

