Madhamapatty Rangaraj: மாதம்பட்டி ரங்கராஜை அசிங்கப்படுத்த நடக்கும் நாடகம் இரண்டாம் திருமணமா? இதை கவனிச்சீங்களா?

Madhamapatty Rangaraj: தமிழ் சினிமா பிரபலங்களுக்கு கேட்டரிங் செஃபாக இருந்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாம் திருமண சர்ச்சை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது இன்னொரு புது அப்டேட் கசிந்து இருக்கிறது. 

மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் மாதம்பட்டி ரங்கராஜ். அப்படம் நல்ல வரவேற்பை பெற்றாலும் அவர் தொடர்ச்சியாக சினிமாவில் நடிக்கவில்லை. தன்னுடைய குடும்ப தொழிலான சமையல் கேட்டரிங்கை கையில் எடுத்தார். 

தமிழ் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், அரசு நிகழ்ச்சிகள் என டிரெண்ட்டிங்கில் சமைத்து வந்தார் மாதம்பட்டி ரங்கராஜ். திடீரென அவருக்கு குக் வித் கோமாளி சீசன் 5ல் நடுவராக கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அந்த சீசனில் ஓரளவு தனக்கான இடத்தை தக்க வைத்து கொண்டார். 

அதிலும் தற்போது ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியின் தற்போதைய நடுவர்களில் ஒருவராக இருக்கும் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னுடைய காமெடியான பேச்சால் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்து கொண்டு இருக்கிறார். இவருக்கும் திமுக இளைஞரணியை சேர்ந்த வக்கீல் ஸ்ருதிக்கும் திருமணம் முடிந்து இரண்டு மகன்கள் உள்ளனர். 

இந்நிலையில் ரங்கராஜின் சமீபத்திய காஸ்டியூம் டிசைனரான ஜாய் கிரிஸில்டாவுக்கு காதல் என கிசுகிசுக்கப்பட்டது. இருவரின் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்தது. ஆனால் ஸ்ருதி ரங்கராஜ் நான் தான் அவரின் மனைவி என ஓபன் கமெண்ட் போட்டு முதல் முற்றுப்புள்ளியை வைத்தார். 

இந்நிலையில் மாதம்பட்டி ரங்கராஜை கல்யாணம் செய்துக்கொண்டதாக ஜாய் கிறிஸில்டா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டார். அடுத்த நாளே தான் ஆறு மாதம் கர்ப்பம் எனவும் அறிவிக்க இந்த விஷயம் பரபரப்பாக பற்றிக்கொண்டது. 

ஆனால் மாதம்பட்டியார் இதுகுறித்து எந்த விளக்கமும் சொல்லப்படாமல் இருந்தார். முதல் மனைவியை விவாகரத்து செய்யவில்லையா எனக் கேள்வி எழுந்த நிலையில் சமீபத்தில் ஸ்ருதியுடன் ஒரு விழாவில் கலந்துக்கொண்டு மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தினார். 

இதற்கு பதிலடியாக ஜாய் தன்னுடைய மருத்துவமனை சிகிச்சை புகைப்படங்களை போட்டு பரபரப்பாக்கினார். இந்நிலையில் சோஷியல் மீடியாவான இன்ஸ்டாகிராமில் மாதம்பட்டியார் தன்னுடைய முதல் மனைவி ஸ்ருதியை மட்டுமே ஃபாலோ செய்கிறார். 

இரண்டாம் மனைவியை அன்பாலோ செய்து விட்டார். அதுபோல ஸ்ருதியும் மாதம்பட்டியாரை பாலோ செய்கிறார். ஜாய் கிரிஸில்டாவும் மாதம்பட்டி ரங்கராஜை அன்பாலோ செய்து விட்டார். இதனால் இருவரும் பிரிந்து விட்டனரா? கோபத்தில்தான் தனக்கும் மாதம்பட்டியாருக்கும் கல்யாணம் எனக் கூறினாரா என்ற கேள்விகளும் எழுந்துள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.