Rajini50 Years: இதுக்கெல்லாம் போய் சாரி கேட்கணுமா? SAC யிடம் சாரி கேட்ட ரஜினி

Rajini 50 years: திரை உலகில் 50 ஆண்டு நிறைவு செய்யும் வகையில் ரஜினிக்கு பல்வேறு தரப்பிலிருந்து வாழ்த்துக்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. அவருடைய முதல் படம் ரிலீஸ் ஆன அதே தேதியில் தான் கூலி திரைப்படம் ரிலீஸ் ஆனது. அதனால் கூலி திரைப்படத்தை கொண்டாடும் வகையில் அவருடைய ஐம்பதாவது ஆண்டு விழாவையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அரசியல் பிரபலங்கள் இருந்து திரை பிரபலங்கள் வரை ரசிகர்கள் உள்பட ரஜினிக்கு வாழ்த்துக்களை கூறிய வண்ணம் இருக்கிறார்கள். குறிப்பாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமி என அனைவரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று ரஜினிகாந்திடமிருந்து ஒரு அறிக்கை வெளியானது.

அதில் அனைத்து திரையுலக நண்பர்களுக்கும் என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி என ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார். அவரது நடிப்பில் நேற்று முன் தினம் வெளியான கூலி திரைப்படம் வெற்றி நடை போட்டு வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் படம் பிரம்மாண்டமாக வெளியான நிலையில் அனைவரும் அந்த படத்தை கொண்டாடி வருகின்றனர்.

பேன் இந்தியா திரைப்படமாக வெளியான நிலையில் படம் வெளியான முதல் நாளில் 170 கோடி வசூலித்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதுவும் கோலிவுட்டில் தமிழ் சினிமாவில் முதல் நாளில் இந்தளவு ஒரு பெரிய வசூலை பெற்ற திரைப்படம் என்றால் அது கூலி திரைப்படம்தான் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறது. இந்த நிலையில் ரஜினியின் 50வது ஆண்டுவிழா சிறப்பாக அவரை பற்றி பல விஷயங்களை பிரபலங்கள் பேட்டிகளில் கூறி வருகிறார்கள்.

அதில் எஸ். ஏ.சந்திரசேகர் ரஜினியை பற்றி அவருடைய அனுபவங்களை பகிர்ந்தார். நான் சிகப்பு மனிதன் என்ற படத்தை ரஜினியை வைத்து இயக்கியவர் எஸ்.ஏ. சந்திரசேகர். அந்தப் படத்தில் சத்யராஜ் வில்லனாக நடித்திருப்பார். அந்த காலத்தில் காலை 9 மணிமுதல் மாலை 6 மணி வரை கால்ஷீட் கொடுப்பார்கள். அந்த வகையில் ஒரு நாள் ரஜினி படப்பிடிப்பிற்கு 9.05க்கு வந்தாராம்.

வந்த உடனே 10 நிமிடத்தில் மேக்கப் போட்டுக் கொண்டு செட்டுக்கு வந்துவிட்டாராம். நேராக வந்ததுமே டைரக்டர் சார் எங்கே என்று தேடினாராம். எஸ். ஏ. சியை பார்த்ததும் சாரி சார் நாளைக்கு சீக்கிரம் வந்துவிடுகிறேன் என்று கூறினாராம். அதே மாதிரி மதிய இடைவேளையின் போதும் ஒரு சாரி கேட்டாராம். மாலையில் பேக்கப் செய்யும் போதும் சாரி சார். நாளைக்கு சரியாக வந்துவிடுகிறேன் என்று கேட்டாராம். இத்தனைக்கும் அப்போதும் ரஜினி ஒரு பெரிய சூப்பர் ஸ்டார்தான். இளைஞர்கள் படிக்கும் ஒரு புத்தகம் தான் ரஜினி என எஸ்.ஏ. சி கூறினார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.