லோகேஷ் கனகராஜுக்கு என்னாச்சி? கூலி படத்தில் செய்த தவறு என்ன?.. ஒரு அலசல்
Lokesh Kanagaraj: யாரிடமும் உதவி இயக்குனராக வேலை செய்யாமல் சினிமாவுக்கு வந்தவர்தான் லோகேஷ் கனகராஜ். டிகிரி முடித்துவிட்டு வங்கியில் வேலை செய்தவர் குறும்படங்களை எடுக்க துவங்கினார். ஒரு கட்டத்தில் சினிமா எடுக்கும் ஆசையில் ஒரு கதையை உருவாக்கினார். ஒரு இரவில் நடக்கும் கதை என அவர் சொன்ன கதையை பல தயாரிப்பாளர்களு நிராகரித்தனர். எஸ்.ஆர். பிரபு மட்டுமே அவரை நம்பினார். அப்படி உருவான படம் தான் மாநகரம்.
இந்த படத்தின் கதை, திரைக்கதையில் ஒரு நேர்த்தி இருக்கும். ஒரு இரவில் நடக்கும் கதைக்கு பரபரவென திரைக்கதை அமைத்திருந்தார் லோகேஷ். இத்தனைக்கும் அந்த படத்திலும் இரண்டு ஹீரோக்கள் இரண்டு கதாநாயகிகள் இருந்தார்கள். அவர்களுக்கு சரியான காட்சிகளை அமைத்து படத்தை சிறப்பாக இயக்கி இருந்தார் லோகேஷ். இந்த படத்தை இயக்குனர்களே பாராட்டினார்கள். அந்த படம் ஹிட் அடித்தது.

அடுத்து கார்த்தியை வைத்து லோகேஷ் இயக்கிய படம்தான் கைதி. இதுவும் ஒரே இரவில் நடக்கும். கதை இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடி கூட இல்லை.. பாடல்கள் இல்லை. ஆனால் பரபரவென திரைக்கதை அமைத்து அசத்தியிருந்தார் லோகேஷ். எப்போது ஸ்டார் நடிகர்களுக்கான இமேஜில் சிக்கினாரோ அப்போது லோகேஷ் கனகராஜ் தனித்தன்மையை இழந்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். விஜயை வைத்து அவர் இயக்கிய மாஸ்டர் படம் விஜய் ரசிகர்களுக்கு பிடித்திருந்தாலும் அது ஒரு சிறந்த படம் இல்லை.
கமலை வைத்து இயக்கிய விக்ரம் படம் நேர்த்தியாக எடுக்கப்பட்டிருந்தாலும் பல ஆங்கில படங்களின் தாக்கம் அதில் இருக்கும். மீண்டும் விஜயை வைத்து அவர் இயக்கிய லியோ படத்தின் இரண்டாம் பாதியும் அதில் வரும் பிளாஸ்பேக் காட்சிகளும் அபத்தமாக இருந்தது. ஆனால் அதற்கு ரிலீஸ் தேதியை முடிவு செய்துவிட்டு அதற்குள் படத்தை முடிக்க சொல்லி தயாரிப்பாளர் கொடுத்த பிரஷர்தான் காரணம். இனிமேல் அது நடக்காது என சொன்னார் லோகேஷ்.

அடுத்து ரஜினியை வைத்து படம் இயக்க போகிறார் என்கிற அறிவிப்பு அறிவிப்பு வெளியானதுமே எதிர்பார்ப்பு எகிறியது. ஏனெனில் ரஜினிக்கு பக்கா ஆக்சன் படம் எப்போதும் செட் ஆகி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும். எனவே லோகேஷும் ரஜினியும் இணைந்ததால் பெரிய ஹைப் உருவானது.
ஆனால் ஃபேன் இந்தியா என்கிற கான்செப்டுக்குள் படத்தை எடுக்க வேண்டிய கட்டாயம்..
ஜெயிலரில் பல நடிகர்களையும் நடிக்க வைத்து 650 கோடி வசூலை பார்த்த சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு கூலி படத்தில் ஆயிரம் கோடிக்கு மேல் அள்ளிவிட வேண்டும் என்கிற ஆசை வந்தது. லோகேஷும் தனக்கு 50 கோடி சம்பளத்தை பேசிவிட்டு ஒரு கதையை எழுதி மலையாளத்திலிருந்து சவுபின் சாகிர், கன்னடத்தில் இருந்து உபேந்திரா, தெலுங்கில் இருந்து நாகார்ஜுனா, பாலிவுட்டில் இருந்து அமீர்கான் என பல நடிகர்களையும் உள்ளே கொண்டு வந்தார்.
பொதுவாக ரஜினி படங்களில் ரஜினியை பிரதானமாக இருப்பார். ஆனால் ஜெயிலர் பட வெற்றி அவரையே மாற்றிவிட்டது. எத்தனை நடிகர்கள் இருந்தாலும் பரவாயில்லை.. என் படம் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து நானே வசூல் சக்கரவர்த்தியாக இருக்க வேண்டும் என நினைக்கும் அவர் கூலி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். விளைவு இப்படி ஒரு படம் ரசிகர்களுக்கு கிடைத்திருக்கிறது. படம் பார்த்த எல்லோரும் சொன்ன ஒரே கமெண்ட் ’இது லோகேஷ் கனகராஜ் படம் போலவே இல்லை அவரின் ஸ்டைல் இந்த படத்தில் இல்லை’ என்பதுதான்.

பல நடிகர்களை வைத்து படம் எடுக்கும்போது எல்லாவற்றிற்கும் முக்கியத்துவம் இருக்க வேண்டும். கதாபாத்திரங்களை சரியாக வடிவமைக்க வேண்டும். கூலி படத்தை பொறுத்தவரை ரஜினியை விட, வில்லன் நாகார்ஜுனாவை விட, சவுபின் சாகிர் கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர் நன்றாக நடித்திருந்தாலும் அது ரஜினி ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான்.
படம் துவங்கி 20 நிமிடங்கள், இன்டர்வல் பிளாக். கடைசி 10 நிமிடங்கள் மற்றும் படத்தில் வரும் ஃப்ளாஷ்பேக் காட்சிகள் மட்டுமே நன்றாக இருக்கிறது.படத்தில் கதை, திரைக்கதையில் அழுத்தமில்லை என பொதுவான விமர்சனங்கள் வருகிறது. ஒவ்வொரு இயக்குனர்களுக்கும் ஒரு ஸ்டைல் உண்டு. லோகேஷ் மற்ற இயக்குனர்களில் இருந்து விலகி வேறுமாதிரியான ஒரு படத்தை கொடுக்கிறார். அவரின் படங்களை யூனிவர்ஸ் என ரசிகர்கள் சொன்னார்கள்.

அதாவது ரசிகர்கள் தமிழ் சினிமா ரசிகர்கள் பார்க்காத ஒரு இருண்ட உலகை காட்டி ஒரு புதிய அனுபவத்தை தனது படங்கள் மூலம் கொடுத்தார் லோகேஷ். அதனால்தான் இளைஞர்களுக்கு பிடித்த இயக்குனராக அவர் மாறினார். ஆனால் மல்டி ஸ்டார். ஃபேன் இந்தியா கான்செப்ட் என்கிற ஃபார்முலாவுக்குள் சிக்கி தனது தனித்தன்மையை இழந்து விட்டார் என்றே சொல்ல வேண்டும்.
கூலி படம் தொடர்பான விமர்சனங்களை பார்த்து லோகேஷ் தன்னை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மீண்டும் இப்படி மல்டி ஸ்டார்ஸ், பேன் இந்தியா படம் என்கிற கான்செப்ட்டுக்குள் சிக்கி இப்படியான மொக்கை படங்களை கொடுத்தால் லோகேஷ் காணாமல் போய்விடுவார். எனவே அவர் தன்னை சுய பரிசோதனை செய்து கொள்ளும் நேரம் இது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

