50 கோடி சம்பளம் வாங்கிட்டு 50 ரூபாய்க்கு படம் எடுத்த லோகேஷ்.. பொளந்தெடுத்த பிரபலம்
தமிழ் சினிமாவில் இந்த வருடம் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த திரைப்படம் கூலி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினியுடன், நாகார்ஜுனா அமீர்கான், உபேந்திரா, சௌவுபின் ஷாகிர், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். பேன் இந்தியா அளவில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி அதாவது நேற்று வெளியாகி இருந்தது.

முதல் நாள் முதல் காட்சி முடிந்ததுமே படத்தின் மீது நெகட்டிவ் விமர்சனங்கள் வரத் தொடங்கியது. அதிலும் சில கும்பல்கள் கூலியை ரவுண்டு கட்டி அடிக்க தொடங்கியது. இந்நிலையில் இந்த மாதிரி சமூக வலைதளங்களில் பரவும் படத்தின் மீதான விமர்சனங்களுக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று மூத்த பத்திரிக்கையாளரும் சினிமா விமர்சகருமான செய்யாறு பாலு கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது,
” ஒரு திரைப்படம் வெற்றி, தோல்வி என்பதை முழுக்க முழுக்க ஒரு இயக்குனரை தான் சாரும். அதில் எதுவும் மாற்றுக் கருத்து கிடையாது. கூலி படத்தைப் பொறுத்தவரை அதற்குரிய முழு பொறுப்பும் லோகேஷ் கனகராஜ் ஏற்க வேண்டும். லோகேஷ் கனகராஜ் அவ்வளவு அசிஸ்டன்ட் டைரக்டர் வைத்திருக்கிறார். அவங்களுக்கு கூலி படத்தின் கதை தெரியுமா? அவர்களிடம் ஏதாவது ஒப்பினியன் கேட்டாரா? இல்ல இவர் மட்டும் ஒன் மேன் ஷோவா இந்த படத்தை எடுத்து இருக்காரா?”

” மற்றொன்று ரஜினி மாதிரி ஒரு மாஸ் ஹீரோக்கு நீங்க படம் பண்ணும் போது முதலில் அதில் உள்ள ஓட்டையை சரி செய்யணும். படத்தில் அவ்வளவு லாஜிக் மிஸ்டேக். அதை ஏன் சரி பண்ணல.லோகேஷ் செஞ்ச முதல் தப்பு படத்தின் பிரமோஷனுக்காக பல இன்டர்வியூ கொடுத்தார். அதில் படத்தில் உள்ள நல்ல காட்சிகளைப் பற்றி பேசாமல் மற்ற விஷயங்களை பேசி அது இன்னும் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துவிட்டது. மற்றொரு விஷயம் என்னவென்றால் ரஜினி மற்றும் நாகார்ஜுனா போன்ற முன்னணி நடிகர்கள் லோகேஷ் மீது அதிக நம்பிக்கை வைத்து விட்டார்கள் அவர்களும் லாஜிக் டீடைல்ஸ் கேட்க தவறிவிட்டார்கள்”.
”இது எல்லாவற்றிற்கும் பொறுப்பு லோகேஷ் மட்டும் தான். 50 கோடி சம்பளம் வாங்கிவிட்டு அதற்கான உழைப்பை கொஞ்சம் கூட போடவில்லை. இவ்வளவு ஆர்டிஸ்ட் வச்சி ஸ்கிரீன் பிரசன்ஸ் கொடுப்பது பெரிய விஷயம் தான். ஆனால் இன்று படம் பார்க்கிற ஆடியன்ஸ் லாஜிக் என்ற விஷயத்தை படம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே கேட்க ஆரம்பித்து விட்டார். அந்தக் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய இடத்தில் லோகேஷ் கனகராஜ் மட்டும் தான் இருக்கிறார். இது ஒரு ரஜினிகாந்திற்கான படம், மேலும் இதில் லாஜிக் ஓட்டைகளை சரி செய்து வெளியிட்டிருந்தால் ஜெயிலரை தாண்டி ஒரு மாபெரும் வெற்றி படமாக கூலி இருந்திருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை” என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

