பொல்லாதவன் முதல் இப்போது வரை!.. வெற்றிமாறனுக்கு தனுஷ் செய்யும் உதவி.. என்னா மனுஷன்!..

Vetrimaran: ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் பாலு மகேந்திராவின் சீடர்களில் ஒருவர்தான் வெற்றிமாறன். தனுஷை வைத்து பொல்லாதவன் என்கிற படத்தை இயக்கி கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானார். அந்த படத்தின் மேக்கிங்கை பார்த்து ஷங்கர் போன்ற இயக்குனர்களே பாராட்டினார்கள். அடுத்து மீண்டும் தனுஷை வைத்து ஆடுகளம் படத்தை இயக்கினார். இந்த படத்தில் நடித்த தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது.

அதன்பின் விசாரணை, வட சென்னை, அசுரன், விடுதலை, விடுதலை 2 ஆகிய படங்களை இயக்கி இந்திய சினிமாவில் ஒரு முக்கிய இயக்குனராக மாறினார் வெற்றிமாறன். அவரின் படங்களை இயக்குனர்களும் கவனிக்க துவங்கினார்கள். அவரின் இயக்கத்தில் நடிக்க தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, பாலிவுட்டில் இருந்தும் முன்னணி நடிகர்கள் ஆசைப்பட்டார்கள்.

#image_title

அதேநேரம் கதையை முழுமையாக எழுதி இதுதான் கதை.. இவ்வளவு நாள்தான் படப்பிடிப்பு.. என திட்டமிட்டு செல்லும் இயக்குனர் வெற்றிமாறன் இல்லை. அதனால்தான் விடுதலை முதல் பாகத்தையும் இரண்டாம் பாகத்தையும் மூன்று வருடங்களுக்கு மேல் எடுத்தார். சூர்யாவுடன் இணைந்து வாடிவாசல் படத்தை எடுக்க திட்டமிட்டார். ஆனால் முழு கதையும் தயாராகவில்லை. அதோடு எப்போது ஷூட்டிங் துவங்கி எப்போது முடியும் என்கிற திட்டமிடலும் அவரிடம் இல்லை. எனவேதான் சூர்யா இந்த படத்திற்கு இதுவரை கால்ஷீட் கொடுக்கவில்லை.

அதனால்தான் சிம்புவை வைத்து வடசென்னை தொடர்பான ஒரு கதையை உருவாக்கி சூட்டிங் போனார் வெற்றிமாறன். ஆனால் அதுவும் சில காரணங்களால் முடங்கிக் கிடக்கிறது. இந்நிலையில்தான் ஒரு ஆச்சர்ய தகவல் வெளியே கசிந்திருக்கிறது. பொல்லாதவன் படம் உருவான நேரம் துவங்கி இப்போது வரை வெற்றிமாறனின் வங்கி கணக்கில் ஒவ்வொரு மாதமும் 5 லட்சத்தை போட்டு வருகிறாராம் தனுஷ்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.