லோகேஷ் படம் எடுக்க ராஜ்கிரன் கிட்ட கத்துக்கணும்.. இப்படி சிதைக்க கூடாது.. விளாசிய பிரபலம்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரஜினி. இவருக்கு வேட்டையன் திரைப்படத்தை அடுத்து மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம் கூலி. இதுவரை தோல்வி படங்களை கொடுக்காத இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ் மற்றும் வசூல் சக்கரவர்த்தி ஆன ரஜினி இருவருமே சேரும்போது படத்திற்கு தனி எதிர்பார்ப்பு இருக்கும்.
அப்படி நேற்று வெளியான கூலி படத்திற்கு ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களும் மிகுந்த நம்பிக்கை வைத்து எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் நேற்று வெளியான திரைப்படம் ரசிகர்களிடம் மோசமான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக லோகேஷ் அவுட் டேட்டட். இன்னும் அரைத்த மாவை தான் அரைத்துக் கொண்டிருக்கிறார். அந்த ஃபார்முலாவை வைத்து ஒரு படம் ஹிட்டுக் கொடுக்க முடியும். எல்லா படமும் ஹிட்டு கொடுத்து விட முடியுமா? என்று அவர் மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் மூத்த பத்திரிகையாளரும் சினிமா விமர்சகருமான வலைப்பேச்சி அந்தணன் லோகேஷ் மீது அடுக்கடுக்கான விமர்சனங்களை வைத்துள்ளார். அதில் கூறியதாவது,” லோகேஷிடம் 24 உதவியக்குனர்கள் இருக்கிறார்கள். அதில் கடைசி இயக்குனர் கூட லோகேஷிடம் பேச முடியாது. அதற்கு முந்தைய இயக்குனர்களிடம் சொல்லி அதன் பிறகு தான் அந்த விஷயம் லோகேஷின் காதுகளுக்கு செல்லும். அது என்னவா போகுதுன்னு தெரியாது. இப்படி தான் அவருக்கு கீழ் உள்ளவர்கள் வேலை செய்கிறார்கள். இதில் ஒரு உதாரணம் கூட சொல்லலாம்”.
”நடிகர் ராஜ்கிரனின் படங்கள் ஆரம்ப காலத்தில் அவரே தயாரித்து, இயக்கி, நடித்தார். அதெல்லாம் தாறுமாறாக வருடக்கணக்கில் ஓடியது. அன்று ரஜினி எவ்வளவு சம்பளம் வாங்கினாரோ அதே அளவு ராஜ்கிரனும் சம்பளம் பெற்றார். அது எப்படி குறுகிய காலத்தில் இவ்வளவு வெற்றி படங்களை கொடுத்து சாதிக்க முடிந்தது, என்ற ரகசியத்தை ஆராய்ந்த போது ஒரு தகவல் கிடைத்தது. அவரின் படத்தை முழுவதுமாக எடுத்து முடித்துவிட்டு. யூனிட்டி கடைசியாக இருக்கும் இலை எடுக்கும் தொழிலாளி முதல் அதே யூனிட்டி முதல் நிலை தொழில்நுட்ப கலைஞர்களான கேமராமேன் வரை எல்லாரையும் வர சொல்லி தன் படத்தை அவர்களுக்கு ஒரு ஷோ போட்டு காட்டுவார்”.

”இதில் ஒரு விஷயம் என்னவென்றால் நாம் நினைக்கும் ஒரு கருத்தை அந்த நடிகரிடம் அல்லது இயக்குனரிடமும் நாம் வெளிப்படையாக சொல்ல முடியாது. அது அவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்துமோ என நினைப்பது மனிதர்களுடைய இயல்பு. இதனால் ராஜ்கிரன் ஒரு ஐடியா செய்தார். தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் படம் பார்க்க செல்லும் போது அவர்கள் கையில் ஒரு பேப்பர் பேனாவை கொடுத்து விடுவார். படம் முடிந்தவுடன் அதைப் பற்றிய கருத்துக்களை அந்த பேப்பரில் எழுத சொல்வார்.”
”அது பாராட்டாக இருந்தாலும் சரி கிண்டலாக இருந்தாலும் சரி எதுவாக இருந்தாலும் எல்லாரும் கண்டிப்பாக எழுதவேண்டும். அதையெல்லாம் வாங்கி வைத்துக் கொள்வார். அவர்கள் எல்லாரும் சென்ற பின்பு அதை ஒவ்வொன்றாக பிரித்து படித்து படத்தில் ஏதேனும் தவறை சுட்டிக்காட்டி இருந்தால் அது சரி செய்து கொள்வார். இதுதான் அவரின் வெற்றிக்கு பெரிய படியாக இருந்தது. இன்று பல இயக்குனர்கள் தாங்கள் எடுத்த படத்தை யாருக்கும் காட்ட அவர்களுக்கு விருப்பமில்லை. சில பேர் தயாரிப்பாளர்களுக்கு கூட படத்தை போட்டு காட்ட மாட்டார்கள். படம் தோல்விக்கு பாதி பிரச்சனைக்கு காரணமே இதுதான்”. என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

