coolie: கூலி படத்தில் இந்த சீன் நெருடலாக இருக்கிறதே… யாராவது கவனிச்சீங்களா?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி படம் நேற்று வெளியானது.
படத்தில் நாகர்ஜூனா, உபேந்திரா, சௌபின் சாகிர், அமீர்கான், சுருதிஹாசன், சத்யராஜ், சார்லி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்தன. ரஜினி திரையுலகில் அடி எடுத்து வைத்து 50 வருடங்கள் ஆகின்றன. இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது இந்தக் கூலி படம்.
இந்தப் படத்தில் வன்முறைக் காட்சிகள் அதிகமாக இருப்பதால் ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. 36 வருடங்களுக்கு முன்பு ரஜினி நடித்த சிவா படத்துக்கு இந்த சான்றிதழ் வழங்கப்பட்டது. படத்தில் இளமையான ஸ்டைல் லுக்குடன் ரஜினியை லோகேஷ் காட்டியுள்ளார். ரஜினியின் வழக்கமான ஸ்டைல் இந்தப் படத்தில் இருக்காது. பஞ்ச் டயலாக் இருக்காது. காமெடியும் இருக்காது. ஜோடியும் கிடையாது.

ஆனாலும் படத்தை மூணே முக்கால் மணி நேரம் விறுவிறுப்பு குறையாமல் உட்கார்ந்து பார்க்க வைத்துள்ளார் லோகேஷ். அதனால்தான் முதல் நாளிலேயே 170 கோடியை வசூலாக வாரிக் குவித்துள்ளது படம். இந்தப் படத்தில் தொழிலாளர்களுக்காக ரஜினி மிகவும் பாடுபடுகிறார். ஒரு கட்டத்தில் குடும்பம் பெரிசா, தொழிலாளி பெரிசா என கேள்வி வருகிறது. அதற்கு குடும்பத்தை விட தொழிலாளிங்க தான் எனக்கு முக்கியம்னு சொல்கிறார் ரஜினி. எப்படி அப்படி சொல்ல முடிகிறது.
அவர் படத்தில் ஒண்டிக்கட்டை அதனால் கூட சொல்லி இருக்கலாம். ஆனால் அவரைத் தலைவராகவும், அவர் சொல்வதை வேதவாக்காகவும் கொண்டு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவர்களும் குடும்பத்தை விட சகதொழிலாளர்கள் தான் முக்கியம் என்று அவர்களின் நலனில் அக்கறை செலுத்துவர். அதன்பிறகு குடும்பத்தில் குழப்பம் வருவதற்கான வாய்ப்புகள் உண்டாகி விடும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

