Madharasi: ‘மதராஸி’ கதை கிட்டத்தட்ட அந்தப் படம் மாதிரிதான்! ஏஆர் முருகதாஸ் கொடுத்த ஷாக்

Madharasi movie: அமரன் படம் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்தடுத்து மதராஸி, பராசக்தி ஆகிய படங்கள் ரிலீஸுக்கு காத்துக் கொண்டிருக்கின்றன. பராசக்தி படத்தை பொறுத்தவரைக்கும் அதன் படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை. இடையில் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் நடந்த ரெய்டால் படப்பிடிப்பில் கொஞ்சம் தொய்வு ஏற்பட்டது. இப்போதுதான் அந்த பிரச்சினையெல்லாம் தீர்ந்து படப்பிடிப்பை ஆரம்பிக்க இருக்கிறார்கள்.

இந்த நிலையில் மதராஸி திரைப்படம் செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி ரிலீஸாக இருக்கின்றது. அதனுடைய சிங்கிள், போஸ்டர் எல்லாம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. இப்படி இருக்கும் சூழ்நிலையில் மதராஸி படத்தின் கதை பற்றி ஏஆர் முருகதாஸ் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். அமரன் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயனின் மார்கெட் உயர்ந்து விட்டது என்றே சொல்லலாம்.

அதனால் அவருடைய சம்பளமும் உயர்ந்திருக்கிறது. ஆனால் பராசக்தி திரைப்படத்தை பொறுத்தவரைக்கும் ஷேரிங் அடிப்படையில்தான் சம்பளத்தை பேசியிருக்கிறார் சிவகார்த்திகேயன். அதாவது படம் ரிலீஸான பிறகு வரும் லாபத்தை பங்கிட்டு கொள்ளலாம் என்ற அடிப்படையில்தான் சிவகார்த்திகேயன் சம்பளத்தை பேசியிருக்கிறார். இப்போது கோலிவுட்டில் அதிக சமபளம் வாங்கும் நடிகர்களின் லிஸ்ட்டிலும் சிவகார்த்திகேயனின் பெயர் இணைந்திருக்கிறது.

ஏற்கனவே சிவகார்த்திகேயனை வைத்து மான் கராத்தே படத்தை ஏஆர் முருகதாஸ் தயாரித்திருந்தார். இப்போது அவரை வைத்து மதராஸி படத்தை இயக்கியிருக்கிறார். சில ஆண்டுகளாகவே ஒரு சரியான வெற்றியை கொடுக்க முடியாமல் ஏஆர் முருகதாஸ் திணறி வருகிறார். அதனால் அவருக்கு வெற்றியை தேடி தரும் படமாக மதராஸி படம் அமையுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

மாவீரன், அயலான், அமரன் என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வந்த சிவகார்த்திகேயனுக்கு மதராஸி படமும் அடுத்த வெற்றியை கொடுக்குமா என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மதராஸி படத்தின் கதை பற்றி முருகதாஸ் சொல்லும் போது இது ஒரு காதல் கலந்த ஆக்‌ஷன் படம் என்று சொல்லியிருக்கிறார். அதாவது காதலில் டிராவல் பண்ணும் ஆக்‌ஷன் படமாக இருக்கும்.

கிட்டத்தட்ட கஜினி படம் மாதிரி. அந்தப் படத்திலும் ஒரு அழகான காதல் கதை. அதன் பிறகு பழிவாங்கும் மாதிரியான கதையாக கஜினி இருக்கும். அதே மாதிரியான படமாகத்தான் மதராஸியும் என முருகதாஸ் கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.