பண்ணை வீட்டில் செமயா வொர்க் அவுட் பண்றாரே ரஜினி!.. வைரலாகும் வீடியோ…

Coolie: தமிழ் சினிமாவுக்கு வந்து 50 வருடங்கள் ஆன பின்னரும் இப்போதும் இந்தியாவின் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் ரஜினி. உலகமெங்கும் இவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். அபூர்வ ராகங்கள் படத்தில் துவங்கிய நடிப்பு பயணம் இன்னமும் நிற்கவில்லை. கடந்த பல வருடங்களில் 40 வருடங்களுக்கு மேல் தமிழ் சினிமாவில் ஹிட் படங்களை கொடுத்து வரும் நடிகர் இவர். இடையில் சில படங்கள் சறுக்கினாலும் உடனே அடுத்து ஒரு ஹிட் படம் கொடுத்து தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும் திறன் இவருக்கு உண்டு.

அதனால் ’விழுந்தவுடன் எந்திரிக்க முடியாமல் இருப்பதற்கு நான் யானை இல்லை.. குதிரை..’ என ஒரு விழாவில் பேசினார். சினிமா துறையில் ரஜினி 50-வது வருடத்தை தொட்டிருக்கும் நிலையில் அவரின் கூலி திரைப்படம் நேற்று உலகம் எங்கும் வெளியானது. ரஜினி ரசிகர்களுக்கு இப்படம் பிடித்து இருக்கிறது. எனவே கொண்டாடி வருகிறார்கள். அதே நேரம் பொதுவான ரசிகர்களுக்கு இப்படம் முழு திருப்தியை கொடுக்கவில்லை. எனவே நெகட்டிவ் விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கிறது.

ஒரு பக்கம் ரஜினி நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே ஜெயிலர் படம் முதல் பாகம் 650 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. கூலி படம் ஆயிரம் கோடி வசூலிக்குமா என்கிற சந்தேகம் வந்திருக்கும் நிலையில் ரஜினி ரசிகர்களின் நம்பிக்கை ஜெயிலர் 2 படத்தின் மீது இருக்கிறது.

இந்நிலையில் கேளம்பாக்கத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் ரஜினி உடற்பயிற்சி செய்யும் வீடியோ இன்று காலை முதலே சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Unseen video of Rajini’s workout pic.twitter.com/tpgufLkTzM

— Kollywood Talks 𝕏 (@kollywoodtalks) August 14, 2025

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.