டல்லடிக்கும் கூலி ஆன்லைன் புக்கிங்… மாஸ் காட்டும் வார்2.. திடீரென நடந்த ஷாக்!

Coolie: தமிழ் சினிமாவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்திற்கு தற்போது பெரிய போட்டியாக மாறி இருக்கிறது வார்2. இதை பார்த்த ரசிகர்களுக்கு ஆச்சரியமான சம்பவம் ஒன்றும் நடந்துள்ளது. 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்து இருக்கும் திரைப்படம் கூலி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஐந்தாவது படமாக வெளிவந்து இருக்கும் திரைப்படம் நேற்றில் இருந்து கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. 

அனிருத் இசையில் பாடல்கள் பெரிய அளவில் வெற்றி பெற்ற நிலையில் படம் வெளியீட்டிற்கு பின்னர் பின்னணி இசை சுமார் ரகமாகி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் லோகேஷின் டிரேட் மார்க் ரெட்ரோ பாடல்களும் இந்த முறை தோல்வியாகி விட்டது. 

இதனால் இப்படம் 1000 கோடி வசூலிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அதில் பாதியை தாண்டுமா என்ற கேள்வி எழுந்து இருக்கிறது. இதற்கிடையில் இப்படத்துக்கு போட்டியாக ஹிரித்திக் ரோஷன், ஜூனியர் என் டிஆர் நடிப்பில் வார்2 படம் வெளிவந்தது. 

#image_title

நேற்று முதல் காட்சி வெளியீட்டுக்கு பிறகு எதிர்மறையான விமர்சனங்களே பெற்று வந்தது. ஆனால் இரண்டாம் நாளான இன்று வார்2 படத்துக்கு திடீரென வரவேற்பு குவிந்து வருகிறது. டிக்கெட் புக்கிங் ஆப்பான புக் மை ஷோ ஆப்பில் கடந்த ஒரு மணி நேரத்தில் டிக்கெட் விற்பனையில் பெரிய வித்தியாசம் நடந்துள்ளது. 

வார்2 படத்தின் டிக்கெட் விற்பனை 63 ஆயிரமாக இருக்கும் நிலையில் கூலி படத்தின் டிக்கெட் விற்பனையோ 39 ஆயிரமாக இருக்கிறதாம். இதனால் இரண்டு மடங்காக வார்2 டிக்கெட் விற்பனை நடந்து வருவதாக கூலி படத்துக்கான எதிர்பார்ப்பில் நடந்த விளைவு என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.