Coolie Movie Collection: உண்மையிலேயே ரிக்கார்டு மேக்கர்தான்! கூலி படத்தின் உண்மையான வசூல்..
Coolie Movie Collection: கூலி படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் 170 கோடி வசூல் செய்திருப்பதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான திரைப்படம் கூலி. நேற்று நாடு முழுவதும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. இந்த நிலையில் கூலி திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. ரஜினி நடிப்பில் உருவான கூலி திரைப்படம் முதல் நாள் வசூல் என்பது 170 கோடி வசூலித்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இதற்கு முன்னதாக விஜய் நடித்த லியோ திரைப்படம் முதல் நாளில் 145 கோடி மட்டும் வசூல் செய்திருந்தது. இப்போது அந்த சாதனையை கூலி திரைப்படம் முறியடித்துள்ளது. கோலிவுட் தமிழ் சினிமா வரலாற்றில் முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படமாக கூலி திரைப்படம் சாதனை படைத்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக கூலி திரைப்படத்தின் பட்ஜெட் 375 கோடி.
முதல் நாளிலேயே 170 கோடி வசூல் செய்வது பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது. கிட்டதட்ட டிக்கெட் முன்பதிவிலேயே 100 கோடிக்கும் மேலாக இந்த படம் சாதனையை அடைந்தது. நேற்றைய தினம் கூலி திரைப்படம் ரிலீஸ் ஆகி இருந்தாலும் திரையுலகில் ரஜினிகாந்த் 50 ஆண்டு நிறைவு செய்தது என இரண்டையும் கொண்டாடும் விதமாக கோலாகலமாக கூலி திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
இந்த நாளில் அந்த படத்தின் முதல் நாள் வசூல் 170 கோடி என்பது பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது. இனிவரும் நாட்கள் தொடர்ந்து விடுமுறை தினம் என்பதால் இன்னும் இதனுடைய வசூல் பல மடங்கு அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. டிக்கெட் முன்பதிவு சாட்டிலைட் டிஜிட்டல் உரிமை என கிட்டத்தட்ட 500 கோடிக்கு மேல் கூலி திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே வியாபாரத்தில் பெரும் தொகையை எடுத்து விட்டது.
அதனால் தயாரிப்பு தரப்பிற்கு கூலி திரைப்படத்தின் மூலமாக ஒரு பெரும் லாபம் கிடைக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இது ஒரு பேன் இந்தியா திரைப்படமாக பெரிய அளவில் உருவான திரைப்படம். மலையாளத்திலிருந்து சவுபின் சாஹிர், தெலுங்கில் இருந்து நாகர்ஜுனா, கன்னடாவில் இருந்து உபேந்திரா ,பாலிவுட்டில் இருந்து அமீர்கான் இவர்களுடன் சத்யராஜ், ஸ்ருதிஹாசன் என பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்திருந்தார்கள்.
கூலி திரைப்படத்திற்கு முன் வெளியான ஜெயிலர் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் சாதனையை பெற்றது. அதற்கு அடுத்தபடியாக இந்த படம் என்பது பெரும் எதிர்பார்ப்பில் இருந்தது. அதுவும் லோகேஷ் ரஜினி முதல் முறையாக கூட்டணி அமைத்த படம் என்பதால் ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை கூலி திரைப்படம் முற்றிலுமாக பூர்த்தி செய்துள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

