Coolie Blockbuster: இங்க மட்டும் இல்ல! ஓவர் சீஸிலும் மாஸ் காட்டும் கூலி.. சன் பிக்சர்ஸ் வெளியிட்ட தகவல்

Coolie Blockbuster:ரஜினி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நேற்று இந்தியா முழுவதும் ரிலீஸ் ஆன திரைப்படம் கூலி. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் அன்பறிவு ஸ்டண்ட் இயக்கத்தில் இந்த படம் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டு நேற்று உலகெங்கும் ரிலீசானது. ரிலீசான முதல் நாளில் படத்திற்கு ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ரஜினியின் நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூலில் சாதனை படைத்தது.

அந்த வசூலையும் தாண்டி கூலி திரைப்படம் இன்னும் பெரும் சாதனையை படைத்து வருகிறது. சமீபகாலமாக ரஜினி படங்கள் ரிலீஸ் என்றாலே அதை விஜய் படங்களுடன் ஒப்பிட்டு தான் அதை ரசிகர்கள் ஒரு விவாதமாகவே பார்த்து வருகின்றனர். அந்த வகையில் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படத்தின் வசூலையும் கூலி திரைப்படத்தின் வசூலையும் வழக்கம் போல ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

லியோ படத்தை கூலி திரைப்படம் முந்துமா முந்தாதா என்பதுதான் அவர்களின் ஒரு பெரிய எதிர்பார்ப்பு. அந்த வகையில் லியோ படம் வெளியான முதல் நாளில் 145 கோடி வசூலை அடைந்தது. ஆனால் கூலி திரைப்படம் அதற்கும் அதிகமாக 170 கோடி வசூலை பெற்று சாதனை படைத்திருக்கிறது. அதுமட்டுமல்ல கோலிவுட் தமிழ் சினிமாவில் படம் வெளியான முதல் நாளில் பெரிய அளவு வசூல் என்றால் அது கூலி திரைப்படம் தான் என்ற ஒரு மற்றொரு சாதனையையும் பெற்றிருக்கிறது.

coolie

இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் இப்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் கூலி திரைப்படம் வெளியாகி முதல் நாளில் அங்குள்ள பண மதிப்பீட்டின் படி 535,000 டாலருக்கும் அதிகமாக வசூலித்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்திய மதிப்பின்படி கிட்டத்தட்ட மூன்று கோடிக்கும் மேல் என்று சொல்லப்படுகிறது. இதுவரை வெளியான தமிழ் படங்களில் கூலி திரைப்படம் தான் ஆஸ்திரேலியாவில் முதல் நாளில் இவ்வளவு வசூல் செய்த திரைப்படம் என்றும் சொல்லப்படுகிறது. அதனால் இன்னும் தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் இதனுடைய வசூல் இங்கு மட்டும் அல்ல ஓவர் சீசிலும் பல மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.