லியோ வசூல் கூட வரலயே!.. கூலி முதல் நாள் வசூல் என்ன தெரியுமா?..

Coolie: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி ரஜினி நடித்து ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கூலி திரைப்படம் நேற்று காலை உலகம் எங்கும் வெளியானது. எப்படியாவது 1000 கோடி வசூலை அள்ளி விட வேண்டும் என கணக்கு போட்ட சன் பிக்சர்ஸ் இப்படத்தை ஒரு பேன் இந்தியா படமாக உருவாக்கியது. மலையாளத்திலிருந்து சௌபின் சாஹிர், தெலுங்கில் இருந்து நாகார்ஜுனா, கர்நாடகாவில் இருந்து உபேந்திரா, பாலிவுட்டில் இருந்து அமீர்கான் என பலரையும் பொறுக்கி இப்படத்தில் நடிக்க வைத்தனர்.

எனவே இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு உருவானது. படத்தின் டிரெய்லரும் ரசிகர்களிடம் கூஸ்பம்சை ஏற்படுத்தவே படத்தை பார்க்க வேண்டும் என்கிற ஆர்வம் பலருக்கும் ஏற்பட்டது. உலகம் முழுவதும் டிக்கெட் முன்பதிவிலேயே இப்படம் 110 கோடிக்கு மேல் வசூல் செய்தது. நேற்று முதல் காட்சி வெளியானதும் படம் சூப்பர்.. ரஜினி செம மாஸ்.. நாகார்ஜுனா செம ஸ்டைல்.. என்றெல்லாம் விமர்சனங்கள் வந்தது.

ஆனால் அடுத்தடுத்த காட்சிகள் வெளியான பின் படத்துக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வரத் துவங்கியது. படத்தில் ரஜினி நடிப்பு, நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், அனிருத் இசை மற்றும் சில காட்சிகள் நன்றாக இருந்தாலும் முழு படமாக பார்க்கும் போது படத்தின் கதை, திரைக்கதை சரியாக இல்லை. லோகேஷ் அதில் தவறு செய்து விட்டார் என்று பல விமர்சகர்கள் மட்டும் இல்லாமல் ரசிகர்களும் சொன்னார்கள்.

loki rajini
loki rajini

எனவே இப்படம் பலரும் சொன்ன ஆயிரம் கோடி வசூலை பெறுமா என்கிற சந்தேகம் பலருக்கும் வந்துவிட்டது. இந்த சுதந்திர தினத்தை தொடர்ந்து மூன்று தொடர் விடுமுறைகள் வருவதால் படம் நல்ல வசூலை பெறும் என்று கணிக்கப்படுகிறது. ஆனாலும் 1000 கோடியை தாண்டுமா என்பது தெரியவில்லை
. இந்நிலையில் நேற்று முதல் நாள் இப்படம் இந்தியாவில் 65 கோடி வரை வசூல் செய்திருக்கிறது இதில் தமிழ்நாட்டில் மட்டும் 28 முதல் 30 கோடி வரை வசூல் செய்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.

வெளிநாடுகளில் இப்படம் 75 கோடியை வசூல் செய்திருக்கிறது. எனவே மொத்தமாக கூலி படத்தின் முதல் நாள் வசூல் 140 கோடியாக இருக்கிறது. லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் விஜய் நடித்து லியோ படம் வெளியான போது அப்படத்தில் முதல் நாள் வசூல் 148 கோடி. அதோடு ஒப்பிட்டால் கூலி படம் 8 கோடி குறைவாகவே வசூல் செய்திருக்கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.