Coolie Movie Review: கேமியோ ரோலில் கூட பித்தலாட்டமா? கூலி படத்தில் இணைந்த காப்பிகேட் யூனிவர்ஸ்!
Coolie Movie Review: கூலி திரைப்படத்தில் நடித்திருக்கும் ஒரு நடிகரின் கேமியோ ரோலில் ரசிகர்கள் கடுப்பாகி இருக்கின்றனர்.
தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி வைத்திருந்த திரைப்படம் கூலி. இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கும் நிலையில் லோகேஷ் கனகராஜ் இப்படத்தினை இயக்கி இருக்கிறார். வழக்கம் போல அனிருத் இசையமைப்பு செய்திருக்கிறார்.
பொதுவாக ரஜினி படத்துக்கு குடும்ப ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கும். ஆனால் இந்த முறை ஓவர் ஆக்ஷன் காட்சிகளால் படத்துக்கு ஏ சென்சார் சர்டிபிகேட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால் குடும்ப ரசிகர்களால் இந்த படத்தினை பார்க்கவே முடியவில்லை.
இது படத்தின் வசூலை பெரிய அளவில் குறைக்க இருக்கும் எனக் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ரஜினிகாந்த் படத்தினை வேற லெவலில் எடுத்து செல்வது என்னவோ கேமியோ ரோல் என்னும் நிலை உருவாகி இருக்கிறது.
அந்த வகையில் நெல்சன் இயக்கிய ஜெயிலர் படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார் நடித்திருந்த நிலையில் படம் சூப்பர் ஹிட் அடித்தது. இதனால் அடுத்து வந்த எல்லா படங்களிலுமே ரஜினிகாந்த் கேமியோ ரோலுக்கு அதிகம் இடம் கொடுத்து வருகிறார்.
தமிழுக்கு வராத மற்ற மொழி நடிகர்களை அழைத்து வந்து நடிக்க வைக்கின்றனர். அந்த வகையில் இந்த முறை கூலி படத்திலும் ஏகப்பட்ட கேமியோ இருப்பதாக கூறப்பட்டு இருந்தது. வில்லனாக தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா, மலையாள நடிகர் ஷொபீன், கன்னடத்தில் இருந்து உபேந்திரா முக்கிய வேடத்தில் நடித்திருக்கின்றனர்.
இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் ஒரு வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. அதற்கேற்ப அவரின் கேரக்டரும் படத்தின் டிரெய்லரில் இணைக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது இன்னொரு ஆச்சரிய தகவல் கசிந்துள்ளது.

அந்த வகையில் இப்படத்தின் ஒரு காட்சியில் அமீர்கானிடம் உன் அப்பாக்கிட்ட பேசிக்கிறேன் என ரஜினிகாந்த் சொல்வார். அப்போது அப்பாவாக ஷாருக்கானை காட்டுவார்கள். அதிலும் ஜவான் படத்தின் விக்ரம் ரத்தோர் கேரக்டர் காட்டப்பட்டு இருக்கிறது.
அட்லீ படத்தில் இருந்து காட்சியினை இணைத்து சரி பண்ணி இருக்கின்றனர். ஷாருக்கானின் கால்ஷூட் பிரச்னையால் இப்படி ஒரு விஷயத்தை கையாண்டு இருக்கிறார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால் இது பெரிய அளவில் படத்துக்கு உதவி செய்யாது எனவும் பேச்சு எழுந்துள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

