சௌபின் சாஹிர்தான் ஹீரோ!.. ரஜினி எப்படி ஒத்துக்கிட்டு நடிச்சார்?.. கூலி பரிதாபங்கள்!..
Coolie: ரசிகர்களிடம் பெரிய ஹைப்பை உருவாக்கிய கூலி திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியானது. தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் கேரளா, கர்நாடகா மற்றும் வெளிநாடுகளிலும் இப்படத்தை காண ரஜினி ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருந்தனர். முதல் நாள் முதல் காட்சி பார்க்க வேண்டும் என்பதற்காக அதிகாலையிலேயே தியேட்டருக்கு சென்று படம் பார்க்க காத்திருந்தனர்.
அதேநேரம் முதல் காட்சி முடிந்தபோது இப்படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் வந்தாலும் இரண்டாவது காட்சி மூன்றாவது காட்சி ஆகியவை முடிந்த பின் படத்திற்கு நிறைய நெகட்டிவ்வான விமர்சனங்கள் வர துவங்கியது. குறிப்பாக படத்தின் கதை, திரைக்கதை சரியாக அமைக்கப்படவில்லை. படத்தின் வியாபாரத்திற்காக எல்லா நடிகர்களையும் நடிக்க வைத்திருக்கிறார்களே தவிர படத்தில் அழுத்தமான கதை இல்லை என விமர்கர்கள் பலரும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டார்கள்.
படம் பார்த்து விட்டு வந்த ரசிகர்களும் இதை உறுதி செய்தார்கள். புரமோஷன் மேடையில் நாகார்ஜுனா பேசும்போது ‘இது நூறு பாட்ஷா என சொன்னார். ஆனால். அப்படி எல்லாம் இதில் எதுவும் இல்லை. படம் ஆவரேஜாகத்தான் இருக்கிறது என சொன்னார்கள். குறிப்பாக கூலி படத்தில் ரஜினியின் கதாபாத்திரத்தை விட மலையாள நடிகர் சௌபின் சாஹிர் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

அந்த கதாபாத்திரத்தை லோகேஷ் சரியாக வடிவமைத்திருக்கிறார். ரஜினியை விட அவருக்கு அதிக காட்சிகள் இருப்பது போல தெரிகிறது. அவரும் அதை சரியாக பயன்படுத்தி சிறப்பாக நடித்திருக்கிறார். கூலி படத்தில் அவர்தான் ஹீரோ.. ரஜினி ஏதோ வந்து வந்து போகிறார்’ என்றெல்லாம் பலரும் பேஸ்புக் டிக்ளர் போன்ற சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
பல நூறு கோடிகளை அள்ளவே பல மொழிகளில் இருந்தும் நடிகர்களை பொறுக்கி போட்டு படத்தை எடுத்திருக்கிறார்கள். ஆனால் அப்படி ஒரு படத்தை எடுக்கும்போது கதை, திரைக்கதை சரியாக அமைக்கப்பட வேண்டும். குறிப்பாக எல்லா கதாபாத்திரங்களுக்கு, சரியான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கூலியில் அதை மிஸ் பண்ணி இருக்கிறார் லோகேஷ் என்றே பலரும் சொல்கிறார்கள்.
ரஜினி படம் என்றால் ரஜினிதான் பிரதானமாக இருப்பார். கூலி படத்தில் இதுவே மிஸ்ஸிங். படம் துவங்கி 16 நிமிடங்கள் கழித்துதான் ரஜினியே வருகிறார். சௌபின் சாஹிர் வரும் காட்சிகளை ரசிகர்கள் ரசித்த அளவுக்கு கூட ரஜினி வரும் காட்சிகளை ரசிக்கவில்லை. அவருக்கான காட்சிகள் என்பது சில நிமிடங்கள் மட்டுமே சில இடங்களில் இருக்கிறது. மற்றபடி பெரிதாக ஒன்றும் இல்லை என்றே பலரும் பதிவிட்டு வருகிறார்கள். மொத்தத்தில் லோகேஷ் கொடுத்த வாய்ப்பை பயன்படுத்தி அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்து பெயரை வாங்கிக் கொண்டு போய்விட்டார் சௌபின் சாஹிர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

