ஒரே போஸ்ட் மொத்தமும் க்ளோஸ்.. கூலி, வார்-2வை முடித்துவிட்ட ப்ளூ சட்டை மாறன்

தமிழ் சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பு மத்தியில் இன்று கூலி படம் வெளியானது. தமிழ் சினிமா ரசிகர்கள் ஏற்கனவே மிகுந்த எதிர்பார்ப்பை கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தில் வைத்திருந்தார்கள். மணிரத்தினம் கமலஹாசனின் கூட்டணியில் வெளியான நாயகன் திரைப்படம் பெரிதும் கொண்டாடப்பட்டது. அதனால் இந்த காம்பினேஷனில் வரும் இரண்டாவது படம் என்பதால் அதிக எதிர்பார்ப்பும் பட ப்ரமோஷனில் ஓவர் ஹைப்பும் கொடுத்தார்கள்.

ஆனால் படம் வந்த முதல் நாளில் இருந்தே இந்தப் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வர ஆரம்பித்தது. இந்தப் படத்திற்காடா இவ்வளவு பில்டப் பண்ணீங்க. இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம் என்று ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தனர். சரி தக் லைஃப் தான் கைவிட்டது. அடுத்து தலைவரின் கூலி படமாவது தமிழ் சினிமாவையும் தமிழ் ரசிகரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வரை இந்தப் படத்திற்கு மிக்ஸ்ட் ரிவ்யூ வந்து கொண்டிருக்கிறது.

#image_title

இன்று கூலி படத்திற்கு போட்டியாக ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி இருக்கும் வார்-2 படமும் இன்று வெளியாகி இருக்கிறது. இந்த இரு படங்களுக்கும் காலையிலிருந்து தொடர்ந்து சினிமா விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் பற்றி கருத்துகளை கொடுத்து வரும் நிலையில் ப்ளூ சட்டை மாறனும் தன்னுடைய பங்கிற்க்கு சம்பவம் செய்திருக்கிறார்.

இரண்டு படங்களும் ரசிகரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறி இருக்கிறது. நாளை தான் ரிவ்யூ வர இருக்கிறது அதற்குள்ளேயே இன்று ஒரு போஸ்ட் போட்டு இரண்டு படங்களுக்கும் சமாதி கட்டி விட்டார். நட்புக்காக படத்தில் விஜயகுமார் மற்றும் சரத்குமார் இருவரும் ஒன்றாக இறந்து போவது போல் காட்சி வரும். அதில் வரும் டெம்ப்லேட் மீம்ஸ் உலகத்தில் மிகவும் பிரபலம். அதை பயன்படுத்தி நாளை தான் போட இருக்கும் ரிவ்யூவை இன்றே சூசகமாக சொல்லிவிட்டார் ப்ளூ சட்டை மாறன்.

இதிலிருந்து தெரிகிறது நாளை கூலி மற்றும் வார்-2 படங்களை வச்சு செய்யப் போகிறார் என்று. ரசிகர்களும் தலைவா உங்க ரிவ்யூக்காக காத்துக் கொண்டிருக்கிறோம் என்று தங்களின் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.