Coolie: பார்த்தாலே சிரிப்பு வருது.. கிங்கு கிங்குன்னு காமெடி பீசாக்கிட்டாரு!.. நாகார்ஜுனா பாவம்..

Coolie: தெலுங்கு சினிமாவில் கிங் என அழைக்கப்படுபவர் நாகார்ஜுனா. தமிழில் இதயத்தை திருடாதே. ரட்சகன் போன்ற சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். பல வருடங்களாகவே தெலுங்கில் ஆக்சன் ஹீரோவாக நடித்து வருகிறார். இவரின் மகன் நாக சைதன்யா ஹீரோவாக நடிக்க வந்த பிறகும் கூட இவர் இன்னமும் ஹீரோவாக நடித்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.

இவருக்கென ஆந்திராவில் பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது. இவரை லோகேஷ் கனகராஜ் கூலி படத்தில் வில்லனாக நடிக்க வைத்திருக்கிறார். ‘ஏழு முறை கதையையும், அவரின் கதாபாத்திரத்தையும் விளக்கி சொன்ன பின்னரே இந்த படத்தின் நடிக்க நாகார்ஜுனா சம்மதித்தார்’ என லோகேஷ் ஒரு பேட்டியில் சொன்னார்.

#image_title

இன்று காலை கூலி படம் வெளியான போது ‘நாகார்ஜுனா செம ஸ்டைலிஷ் ஆக இருக்கிறார்.. செமையாக நடித்திருக்கிறார்’ என்றெல்லாம் பலரும் சொன்னார்கள். ஆனால் இரண்டு காட்சிகள் வெளியான பின் படத்திற்கு நிறைய நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தது .அதில் நாகார்ஜுனாவின் வில்லன் கதாபாத்திரம் சரியாக வடிவமைக்கப்படவில்லை.. இன்னும் சொல்லப்போனால் அவர் வரும் காட்சிகளில் அவரைப் பார்த்தாலே சிரிப்பு தான் வருகிறது.. லோகேஷ் அவரை காமெடி பீஸ் ஆக்கிவிட்டார்.. சௌபின் சாஹிர் கதாபாத்திரத்துக்கு இருக்கும் முக்கியத்துவம் கூட அவருக்கு இல்லை’ என சினிமா விமர்சனங்கள் கூறி வருகிறார்கள்.

பிரபல youtube சினிமா விமர்சகர் பிரசாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘நாகார்ஜுனா வரும் காட்சிகள் இதுவரை சினிமாவில் வந்த டார்கஸ்ட் காமெடியின் உச்சம்.. அவர் சீரியஸா பண்ணும்போது சிரிப்புதான் வந்துச்சு’ என கலாய்த்திருக்கிறார். மொத்தத்தில் கிங்கு கிங்கு என்று கூட்டி வந்து இப்படி நாகார்ஜுனாவை லோகேஷ் காமெடி பீசாக்கி விட்டார் என ரசிகர்களும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.