1000 கோடிக்கு ஆப்பு வச்ச லோகேஷ்!.. கை கொடுக்காத கூலி!.. இனிமே ஜெய்லர் 2-தான்!..

Coolie: ரஜினி நடிப்பில் உருவான கூலி திரைப்படம் இன்று காலை உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், உபேந்திரா என பலரும் நடித்திருந்தனர். மேலும் பாலிவுட் நடிகர் அமீர்கானும் ஒரு கேமியோ வேடத்தில் நடித்திருந்தார். அனிருத் படத்திற்கு இசையமைத்திருந்தார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியானது. லோகேஷ் கனகராஜும் ரஜினியும் கூட்டணி அமைத்ததால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உருவானது. எனவே இப்படத்தில் ஓடிடி, தொலைக்காட்சி உள்ளிட்ட மற்ற உரிமைகள் எல்லாம் சேர்த்து ரிலீஸுக்கு முன்பு 500 கோடி வரை வியாபாரம் ஆனது. ரிலீசுக்கு முன்பே 500 கோடி என்பதால் தியேட்டரில் படம் வெளியான பின் கண்டிப்பாக கூலி 1000 முதல் 1200 கோடி வரை வசூல் செய்யும் என பலரும் சொன்னார்கள்.

இதுவரை எந்த தமிழ் சினிமாவும் ஆயிரம் கோடி வசூலை தொட்டதில்லை. ரஜினியின் ஜெயிலர் படம் 650 கோடி வசூல் செய்துதான் இதுவரை கோலிவுட்டிலேயே சாதனையாக இருக்கிறது. ரஜினியின் போட்டி நடிகராக பார்க்கப்படும் விஜயின் படம் கூட அவ்வளவு வசூலை இதுவரை பெற்றதில்லை.

தற்போது கூலி படம் கண்டிப்பாக ஆயிரம் கோடி வசூலை தொடும் என ரஜினி ரசிகர்கள் நம்பினார்கள். ஆனால் இன்று காலை படம் வெளியானவுடன் படத்திற்கு நிறைய நெகட்டிவ் விமர்சனங்கள் வர துவங்கியது. படத்தின் 2.45 மணி நேரம் ஓடும் படத்தில் முதல் அரை மணி நேரம், இடைவேளை காட்சி, கடைசி 20 நிமிடம் மற்றும் படத்தில் வரும் ஃப்ளாஷ்பேக் ஆகிய நான்கு மட்டுமே நன்றாக இருக்கிறது. மற்றபடி படத்தின் கதை, திரைக்கதை சரியாக அமைக்கப்படவில்லை. பல நடிகர்கள் நடித்தாலும் சௌபின் சாஹிர் கதாபாத்திரம் மட்டுமே நன்றாக இருந்தது என பல விமர்சகர்கள் பலரும் சொன்னார்கள்.

coolie rajni and lk
coolie rajni and lk

இதனால் படத்தை பார்க்க திட்டமிட்டிருந்த பலரும் படத்தை பார்க்காமல் பின் வாங்கி வருகிறார்கள். இது கண்டிப்பாக கூலியின் வசூலை பாதிக்கும் என்பதால் கண்டிப்பாக இப்படம் ஆயிரம் கோடி வசூலை தொடாது என்று நம்பப்படுகிறது. கூலி படம் ஆயிரம் கோடி வசூலை தொடுமா என லோகேஷ் கனகராஜிடம் கேட்டதற்கு ‘அது எனக்கு தெரியாது.. 150 ரூபாய் கொடுத்து படம் பார்க்க வரும் ரசிகர்களை திருப்திப்படுத்தினால் போதும் என்று மட்டுமே நினைக்கிறேன்’ என சொன்னார். ஆனால் அதுவும் நடக்கவில்லை. கூலி படம் ரசிகர்களை முழுமையாக திருப்தி படுத்தவில்லை.

எனவே நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ஜெயிலர் 2 படம்தான் ரஜினி ரசிகர்களின் ஒரே நம்பிக்கையாக இருக்கிறது. இந்த படம் சூப்பர் ஹிட் அடித்து 1000 கோடி வசூலை தொடுமா என பொறுத்திருந்திதான் பார்க்க வேண்டும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.