சிங்கப்பெண்ணே: ஆனந்திக்கு வரும் பேராபத்து? தப்பித்தாளா? தாங்கிப் பிடித்தானா அன்பு?
சன்டிவியில் சிங்கப்பெண்ணே தொடர் விறுவிறுப்பு குறையாமல் நடந்து வருகிறது. இன்று நடந்த எபிசோடின் தொகுப்பு இதோ…
டாக்டரிடம் காதலுக்குப் புது இலக்கணம் சொல்கிறான் அன்பு. ஆனந்தி உன்னை உள்ளங்கையில் வைத்துத் தாங்க வந்த ஆண் தேவதை தான் அன்பு. அவரு கைப்பிடியை விட்டு நீ எங்கேயும் போயிடாதே. கெட்டியா புடிச்சிக்கோ. அன்பு உன்னை நல்லா பார்த்துக்குவாருன்னு சொல்கிறார் டாக்டர். அதே நேரம் மகேஷ் தனது காரில் அடிபட்ட பெண்ணை அதே ஆஸ்பத்திரிக்கு அழைத்து வருகிறான்.
ஆனந்தி வெளியே கிளம்புகிறான். நான் போய் மருந்து வாங்கிட்டு வர்றேன். நீ இங்கேயே உட்காருன்னு சொல்கிறான். அNது நேரம் மகேஷூம் மருந்து வாங்க வருகிறான். இருவரும் சந்தித்துக் கொள்வார்கள் என்ற நிலையில் டுவிஸ்ட் வைக்கிறாங்க. ஒரு திருப்பத்தில் சந்திக்காமல் விட்டவர்கள் இன்னொரு திருப்பத்தில் சந்திக்கின்றனர்.
மகேஷ் ஆனந்தி மறந்து விட்ட ஃபைலை எடுக்க வரும் அன்புவைப் பார்த்து விடுகிறான். அன்பு இங்கே நீ எதுக்கு வந்துருக்க? ஆனந்திக்கு ஒண்ணுமில்லையேன்னு கேட்க, அதெல்லாம் இல்ல. அம்மாவுக்குத்தான்னு சொல்லி சமாளிக்கிறான் அன்பு. ஆனந்தியிடம் நடந்த சம்பவத்தைக் கூறுகிறான் அன்பு. மகேஷ் சார் வந்தது குறித்தும் சமாளித்தது குறித்தும் சொல்கிறான்.
கம்பெனியில் கருணாகரன் அன்புவை குறுகுறுன்னு பார்க்கிறான். லோடு இறக்குறவங்களுக்கு சம்பளம் கொடுக்காததால் மூலப்பொருள் ஃபேபரிக் வரவில்லை. அதனால கம்பெனியில் வேலை இல்லைன்னு சொல்லி அனைவரையும் அனுப்புகிறான் கருணாகரன். அதே நேரம் சம்பளமும் இல்லை என்று சொன்னதும் அனைவருக்கும் கோபம் வருகிறது.

அன்பு ஏன் நீங்க லோடு இறக்குனவங்களுக்கு சம்பளம் பாக்கியை வச்சீங்க? முதல்ல அவங்களுக்கு சம்பளம் கொடுத்து ஃபேபரிக்கை வரவழைச்சி எங்களுக்கு வேலையைக் கொடுங்கன்னு சொல்கிறான் அன்பு. நாங்க என்ன செய்யணும்னு நீ எனக்கு சொல்லித் தர வேணாம்னு கருணாகரன் சொல்கிறான்.
லோடை வர வைங்க. நாங்க இறக்கிறோம். எங்க கம்பெனி முதலாளி மகேஷூக்காக நாங்க இறக்குறோம். நீங்க முதல்ல லோடை வர வையுங்கன்னு சொல்கிறான் அன்பு. ஆனந்தியால அவ்வளவு வெயிட்டைத் தூக்க முடியாது. அவங்களுக்காக நான் செய்றேன்னு சொல்கிறான் அன்பு. அதெல்லாம் முடியாது.
இவங்களை விட்டுட்டு நான் லோடைத் தூக்கச் சொன்னா பாரபட்சமா நடத்துற மாதிரி தெரியும்னு சொல்கிறான் கருணாகரன். அப்படி எல்லாம் யாரும் கம்ப்ளைண்ட் பண்ண மாட்டாங்க சார்னு அன்பு சொல்கிறான். நான் கம்ப்ளைண்ட் பண்ணுவேன்லன்னு உஷா சொல்கிறாள். அதற்காக சூழலைப் புரிந்துகொண்டு ஆனந்தியும் லோடை இறக்குகிறாள். அடுத்து என்ன நடக்கிறது என்பதை நாளைய எபிசோடில் பார்க்கலாம்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

