Coolie: கூலி ‘லோகி’ படமே இல்ல… கதையில் இத்தனை ஓட்டையா? கடுப்பில் ரஜினி ரசிகர்கள்!
Coolie: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியாகி இருக்கும் கூலி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மோசமான விமர்சனங்களை பெற துவங்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கிறது.
தமிழ் சினிமாவில் இதுவரை எதிர்மறை விமர்சனங்களை குவிக்காத முக்கிய இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களை இதுவரை இயக்கிய அவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கூலி திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மிகப்பெரிய பொருட் செலவில் வெளியாகி இருக்கும் திரைப்படம் இன்று தமிழ் உள்பட பழமொழிகளின் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது. ரஜினிகாந்த் உடன் நாகார்ஜுனா, ஷொபீன், ஸ்ருதிஹாசன், சத்யராஜ், உபேந்திரா உள்ளிட்ட டாப் பிரபலங்கள் நடித்திருக்கின்றனர்.
இத்திரைப்படம் தமிழ் சினிமாவின் முதல் ஆயிரம் கோடி படமாக மாறும் என்பது பலரின் கருத்தாக இருந்தது. ஆனால் தற்போது முதல் நாளில் முதல் காட்சி முடிந்த சில நிமிடங்களில் இருந்து அதிகமான நெகட்டிவ் வசனங்கள் குவிந்து வருகிறது.
எப்போதும் போல ரஜினிகாந்த் தன்னுடைய நடிப்பால் படத்தை மொத்தமாக தூக்கி சுமத்த வேண்டிய நிலை உருவாகி இருக்கிறது. ஆனால் எப்போதும் கதையில் எங்கும் பிசுறு தட்டாமல் இயக்கும் லோகேஷ் கனகராஜ் இந்த முறை மிகப்பெரிய தவறு செய்திருக்கிறார்.

முதல் பாகம் ஓரளவு நல்ல வரவேற்பு பெற்றாலும் இரண்டாவது பாகத்தில் நிறைய இடங்கள் ரசிகர்களிடம் அலுப்பை ஏற்படுத்துவதாக அமைந்து இருப்பதாக கருத்துகள் குவிந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த முறை ஓவர் ரத்தம் படத்தின் தன்மையை குறைப்பதாகவும் அமைந்துள்ளது.
பொதுவாக லோகேஷ் கனகராஜ் படத்தில் ஆக்ஷன் குவிந்தாலும் எங்குமே குறை இருக்காது. ஆனால் இந்த இரண்டாம் பாகத்தில் நிறைய தவறுகள் இருப்பதாகவே கமெண்ட் குவிந்து வருவது படத்தின் வரவேற்பை பெருமளவில் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

