எப்பா இதான்டா படம் .. தலைவரை வெச்சு லோகேஷ் செய்த தரமான சம்பவம்..

தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று கூலி இன்று உலகம் எங்கும் கோலாகலமாக வெளியாகி உள்ளது. இந்நிலையில் இந்த படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்த மூத்த பத்திரிக்கையாளரும் சினிமா விமர்சகருமான செய்யாறு பாலு கூறியதை பார்க்கலாம்.

”கதைப்படி ரஜினி பேச்சுலர்ஸ் தங்கும் மேன்ஷன் ஒன்றை நடத்தி வருகிறார். ரஜினியின் நெருங்கி நண்பர் சத்யராஜ் ஒரு கட்டத்தில் கொல்லப்படுகிறார். இதனால் சத்யராஜ் மகளான ஸ்ருதிஹாசன் ரஜினியை வெறுக்கிறார். இந்த கொலைக்கு யார் காரணம்? நண்பனுக்கு இந்த மாதிரி நிலைமையை வரவழைத்தது யார்? இதற்குப் பின் யார் இருக்கிறார். என்று தேட ஆரம்பிக்கிறார் ரஜினி. துறைமுகம் காட்டப்படுகிறது. அதை முழுவதும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் நாகார்ஜுனா”.

#image_title

”அதில் அவருடைய வேலையே வாட்ச்களில் தங்கம், வைரம் கடத்துவது தான். ஏம்பா இந்த தங்கம் கடத்துவதற்காக நாகர்ஜுனா இருக்காரு அப்படின்னு நினைத்தால் அதிலும் ஒரு ட்விஸ்ட் வைத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். நாகர்ஜுனாக்கு எதிராக செயல்படும் போலீஸ், அண்டர் கிரவுண்ட் ஏஜென்ட் என அனைவரையும் நாகார்ஜுனாவின் வலது கையாக இருந்து போட்டுத் தள்ளுகிறார் சௌபின் சாஹிர். அதிலும் ஒரு ட்விஸ்ட் வைக்கிறார் லோகேஷ் கனகராஜ்”.

”அந்த துறைமுகத்தில் நண்பனுடைய சாவுக்கு யார் காரணம். என்று முன்னாள் கூலியாக ரஜினி தேடுவது தான் மீதி கதை. கதை சாதாரணமாக இருந்தாலும் அடுத்தடுத்து நடக்கும் எதிர்பாராத ட்விஸ்ட் ஒரு ஆங்கில படம் பார்ப்பது போல் இருந்தது. முதல் பாதி ஸ்லோவாக இருந்தாலும் இரண்டாம் பாதியில் அதிரடியாக செல்கிறது. அதிலும் கடைசி 20 நிமிடம் படம் வேற லெவல். இந்த படத்தின் மற்றொரு ஹீரோ அனிருத் தான். ஏனென்றால் அனைத்து கேரக்டர்களுக்கும் பக்காவாக பிஜிஎம் போட்டு படத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி உள்ளார்”.

”குறிப்பாக சௌபின் சாஹிர் கேரக்டர் படத்தின் பேசும் பொருளாக இருக்கும். இவர் நல்லவரா கெட்டவரா என கணிக்க முடியாதது போல் அவரின் கதாபாத்திர வடிவமைப்பு இருக்கும். ரஜினிகாந்த் என்னும் 1950 மாடல் வண்டி இன்னும் பல லட்சம் கிலோ மீட்டர்கள் ஓடும். ஆயிரம் கோடி வசூல் என்பதை தாண்டி கண்டிப்பாக இந்த படம் ரஜினி ரசிகர்களுக்கு மிகச்சிறந்த ட்ரீட்டாக இருக்கும் அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை”. இவ்வாறு படத்தைப் பற்றிய முழு தகவலையும் பகிர்ந்துள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.