கூலி படத்துடன் கிளாஷ் விட்டு மண்ணை கவ்விய வார்2… இதுக்கா இந்த பில்டப்பு?

war 2 : ஹிரித்திக் ரோஷன், ஜூனியர் என்.டிஆர். நடிப்பில் உருவாகி இருக்கும் வார்2 திரைப்படம் இன்று வெளியாகி இருக்கும் நிலையில் கூலி படத்தால் இப்படத்தின் வசூல் பெரிய அடி வாங்க இருக்கிறது. 

ஸ்பை ஆக்‌ஷன் படமான வார் பட வரிசையில் இரண்டாம் பாகம் ஹிரித்திக் ரோஷன், ஜூனியர் என்.டிஆர் நடிப்பில் உருவாகி இருக்கிறது. எப்போதும் போல இருவருமே ஆக்‌ஷனில் பட்டையை கிளப்புவார்கள் என்பதால் இப்படத்தை படக்குழு தைரியமாக ஆகஸ்ட் 14ஐ குறி வைத்தது. 

ஆனால் கதையே இல்லாமல் ஆக்‌ஷன், விஎஃப்எக்ஸை நம்பியே இப்படத்தினை வெளியிட்டுள்ளனர். அதிலும், ஜூனியர் என்.டிஆர். எந்த நம்பிக்கையில் இப்படத்தினை ஒப்புக்கொண்டார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 400 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் கிராபிக்ஸ் பல இடத்தில் அடி வாங்கி இருக்கிறது. 

வார் முதல் பாகம் பெரிய அளவில் வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாம் பாகம் பல எதிர்பார்ப்பை உருவாக்கி வைத்திருந்தது. ஆனால் அதை 10 சதவீதம் கூட படக்குழு பூர்த்தி செய்யவில்லை என்பதுதான் உண்மை. கதையில் ஈர்ப்பு இல்லை என்பதால் பல இடங்களில் முரண்பாடாக காட்சிகள் நகர்கிறது. 

#image_title

ரஜினிகாந்த் மாதிரியான பெரிய ஸ்டாரின் படத்துடன் மோதும் போது இப்படி ஒரு கதையை எப்படி எடுத்தார்கள். ஸ்டாரை வைத்து சமாளிக்கலாம் என நினைத்ததே அபத்தம் என்றாகி விட்டது. இந்நிலையில் வார் 2 படம் தனியாக வெளியாகி இருந்தால் கூட ஓரளவு வசூல் கிடைத்திருக்கும். 

தற்போது கூலியுடன் மோதி பெரிய வசூல் பிரச்னையை சந்திக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. பெரிய அளவில் நெகட்டிவ் விமர்சனங்களையே பார்க்க முடிகிறது என்பதும் அதிர்ச்சியான விஷயமாக மாறி இருக்கிறது. அடுத்ததடுத்த நாட்களில் இதனால் காட்சிகளும் குறைக்கப்படலாம் என நம்பப்படுகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.