Coolie Movie Review: நோ கேமியோ! நோ எல்சியு! படமா இது? ‘கூலி’ படம் பார்த்தவர்கள் சொல்றது என்ன?

Coolie movie review: கூலி படத்தின் டிரைலரை பார்த்து பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்தனர். டிரைலரில் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் லோகேஷ் காட்டிய விதம் பிரமிப்பாக இருந்தது. அவர்களை திரையில் எப்போது பார்க்கப் போகிறோம் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்தார்கள். ஒரு வழியாக இன்று கூலி திரைப்படம் உலகெங்கிலும் ரிலீஸ் ஆகி இருக்கின்றது. பேன் இந்தியா திரைப்படமாக சர்வதேச அளவில் மிக பிரம்மாண்டமாக இந்த படம் ரிலீஸ் ஆகி இருக்கின்றது. படத்தை பார்த்த பலரும் பல விதமான கருத்துக்களை கூறி வருகின்றனர்.

படத்தை பொருத்தவரைக்கும் டைட்டில் கார்டில் ரஜினியின் அறிமுகம் பிரம்மாண்டமாக இருப்பதாக அனைவரும் கூறி வருகிறார்கள். அதே நேரம் படத்தின் கிளைமாக்ஸில் கடைசி 20 நிமிடம் எல்லா கதாபாத்திரத்தையும் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார் லோகேஷ். அதுவும் நன்றாக இருக்கிறது என கூறி வருகிறார்கள். ட்ரெய்லரில் காட்டிய அந்த கதாபாத்திரங்கள் தான் படத்தில் வருகிறார்கள் .எந்த கேமியோவும் கிடையாது. படத்தை பெரிய அளவில் எதிர்பார்த்து யாரும் வர வேண்டாம். ஏனெனில் நாம் யோசித்துக் கொண்டு வருவது ஒன்னு, படத்தில் காட்டுவது வேறு ஒன்றாக தான் இருக்கிறது.

ரஜினிக்கு முதல் பாதியில் எந்த அளவு மாஸ் கொடுக்க வேண்டும் இரண்டாம் பாதியில் எந்த அளவு மாஸ் கொடுக்க வேண்டும் என லோகேஷ் கனகராஜ் ரைட்டிங்கில் அற்புதப்படுத்தி இருக்கிறார். ஏனெனில் முதல் பாதியை பொருத்தவரைக்கும் இது மாஸான படம் இல்லையோ? கன்டென்ட்டை மையப்படுத்திய படமோ என்ற அளவுக்கு யோசிக்க வைத்திருப்பார். ஆனால் இரண்டாம் பாதியை பார்க்கும் பொழுது தான் இதுதான் ஒரிஜினல் மாஸ். இதுதான் og சம்பவம் அப்படிங்கிற மாதிரி காட்டி இருக்கிறார் லோகேஷ். அது மட்டுமல்ல படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இருக்கிறார்கள்.

அவர்கள் ஒவ்வொருவருக்கும் முக்கியத்துவம் கொடுத்து படத்தை எடுத்திருக்கிறார் லோகேஷ் .ஒவ்வொருவருக்கும் தனித்தனி ஸ்டைல், தனி தனி பிஜிஎம், மாஸான என்ட்ரி என அதகளப்படுத்தி விட்டார். குறிப்பாக நாகர்ஜுனா அவருடைய முடியை கோதுவது அமீர்கான் நாயுடன் வந்து இறங்குவது என பிஜிஎம்மை போட்டு அனிருத் பட்டையை கிளப்பிவிட்டார் .ஜெய்லர் படத்தில் சிவராஜ்குமார் என்ட்ரி எந்த அளவுக்கு மாஸ் காட்டியதோ அதைப்போல கூலி படத்தில் உபேந்திராவின் எண்டிரி திரையரங்கமே ரணகளம் ஆகிவிட்டது. ட்ரெய்லர் விழாவில் ரஜினி பேசும்போது இவரெல்லாம் செட் ஆகுமா? என சௌபினை பார்த்து ரஜினி கேட்டிருப்பார்.

ஆனால் படத்தில் சௌபினைத் தவிர அந்த கதாபாத்திரத்தை யாராலும் பண்ணி இருக்க முடியாது. அந்த அளவுக்கு கொளுத்தி விட்டார் சௌபின். ரஜினி நாகார்ஜுனா இவர்கள் அனைவரையும் தூக்கி சாப்பிடும் அளவுக்கு சவுபின் கேரக்டர் அமைந்தது தான் சிறப்பு. கடைசியாக ரஜினியை பெரிய அளவில் கொண்டாட வேண்டும் என நினைத்தாரோ என்னவோ இந்த படத்தில் லோகேஷ் ரஜினி ரசிகரா அல்லது கமல் ரசிகரா என கேட்கும் அளவுக்கு ஓஜி சம்பவமாக செய்திருக்கிறார்.

அவருடைய ஸ்டைல் ஆகட்டும் முதல் பாதியில் ரஜினிக்கு உரிய அந்த ஹியூமறை நன்றாக பயன்படுத்தி இருக்கிறார். முத்து படையப்பா படத்தில் பார்க்கும் பொழுது பாம்பு பாம்பு என குறும்புத்தனமான ரஜினியை ரசித்திருப்போம். அது அப்படியே கூலி படத்தில் முதல் பாதியில் பார்க்க முடிகிறது. இரண்டாம் பாதியில் சென்டிமென்ட் ஆக்சன் என மாஸ் ஹீரோவாக மாறி இருக்கிறார். மொத்தத்தில் ரஜினியின் 50வது ஆண்டு சினிமாவை கூலி படத்தோடு கொண்டாட வைத்திருக்கிறார் லோகேஷ் என பெரும்பாலான ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.