சிம்பு இல்லனா சியான் விக்ரம்… தேசிய விருது வாங்கியவருக்கும் இதான் நிலமையா?…
Chiyan vikran: நடிகர் விக்ரமுக்கு கடந்த பல வருடங்களாகவே வெற்றி படங்கள் அமையவில்லை. அவர் எப்போது கடைசியாக ஹிட் படம் கொடுத்தார் என்பது ரசிகர்களுக்கே மறந்து விட்டது. அவரும் பல இயக்குனர்களின் படங்களின் கதைகளில் நடித்து பார்த்தார். ஆனால் கிளிக் ஆகவில்லை.
மிகவும் ஆர்வமுடன் பல கெட்டப்புகளில் கோப்ரா படத்தில் நடித்தார். படமும் ஊத்திக்கொண்டது தயாரிப்பாளருக்கு பல கோடிகள் நஷ்டம்.
கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் மகான் படத்திலும் நடித்தார். அந்தப் படமும் ஓடவில்லை. மணிரத்தினம் இயக்கத்தில் நடித்த பொன்னியின் செல்வன் படம் மட்டுமே ஓடியது. ஆனா அதில் விக்ரம் ஹீரோ இல்லை. அடுத்து ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்தார். வித்தியாசமான கதையில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் சீயான் விக்ரம். ஆனால் படம் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடிக்க வில்லை. இன்னும் சொல்லப்போனால் படத்தின் கதையே ரசிகர்களுக்கு புரியவில்லை.

அடுத்து அருண்குமார் இயக்கத்தில் வீர தீர சூரன் என்கிற படத்தில் நடித்தார். இந்த படமும் ஊத்திக் கொண்டது. இந்த படத்திற்கு பின் மண்டேலா, மாவீரன் ஆகிய படங்களை இயக்கிய மடோனே அஸ்வின் சொன்ன கதையில் நடிக்க சம்மதித்தார் விக்ரம். இந்த படத்தை மாவீரன் பட தயாரிப்பாளரை தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் படத்தின் ஷூட்டிங் இதுவரை துவங்கப்படவில்லை. இந்நிலையில்தான் விக்ரமுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் இந்த படத்தில் இருந்து மடோனே அஸ்வின் விலகியது தெரிய வந்திருக்கிறது.
எனவே இப்போது பார்க்கிங் படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணனை அழைத்து அவர் ஒரு கதை சொல்லி பத்து நாட்களாக அது தொடர்பான வேலைகள் நடந்து வருகிறது. பார்க்கிங் படத்திற்காக தேசிய விருது வாங்கி இருக்கிறார் ராம்குமார் பாலகிருஷ்ணன். பார்க்கிங் படத்திற்கு பின் சிம்புவை வைத்து அவர் ஒரு படம் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது.
அந்த படத்தில் சந்தானமும் நடிக்கவிருந்தார். ஆனால் அப்படத்தின் தயாரிப்பாளர் அமலாக்கத்துறை சோதனையில் சிக்கியதால் படம் டேக் ஆப் ஆகவில்லை. இதனால்தான் சிம்பு வெற்றிமாறன் படத்தில் நடிக்கப் போனார். தற்போது விக்ரமை வைத்து படம் இயக்குப்போகிறார் ராம்குமார் பாலகிருஷ்ணன். இது விக்ரமின் 63வது திரைப்படமாகும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

